பயிர் ஒழுங்குபடுத்தல்:
பருவகால பயிர் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் பயிர்கள் தரம் உயர்ந்தும், அதிக விலைக்கும் போகும். எனவே, விவசாயிகள் பெரும்பாலும் பூக்களைக் கிள்ளிவிடுவதன் மூலம் பருவகாலப் பயிர்களை தவிர்க்கின்றனர்.
undefined
இதற்காக, மாலிக் அமிலம், நாப்தாலிக் அமிலம் மற்றும் 2.4 டி (30 பிபிஎம்) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், வேர்களைக் கவாத்து செய்வதன் மூலமும், வேர்களை வெளியே எடுத்து விடுவதன் மூலமும், சில நேரம் கிளைகளை வளைத்துவிடுவதன் மூலமும், தேவையற்ற இலைகளை வெட்டிவிடுவதன் மூலமும் பூக்களை அரும்ப செய்யலாம்.
பயிர்ப் பாதுகாப்பு:
பழ ஈக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் ஒரு லிட்டருக்கு பாஸ்போம்டான் 0.5 மி.லி. மருந்தை நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மாவுப் பூச்சியை அழிக்க மாலத்தியான் ஒரு லிட்டருக்கு 2 மி.லி மரத்தைச் சுற்றி பாலிதீன் பையைக் கட்டுவதன் மூலம் தடுக்கலாம்.
நோயைப் பொறுத்தவரை வேரழுகல், இலைப்புள்ளி நோய் அதிக சேதம் ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த குயினால் சல்பேட்டை ஊசி மூலம் செலுத்தியும், காப்பர் ஆக்சிகுளோரைடையும் ஒரு லிட்டருக்கு 2 மி.லி. பயன்படுத்தலாம்.
அறுவடை:
பதியன், காற்றடுக்குதல், ஒட்டுக் கட்டுதல் மூலம் நடப்பட்ட மரங்கள் 2 முதல் 3 ஆண்டில் காய்க்கத் தொடங்கும். பொதுவாக, காய்களை பழுக்கும் நிலையில் மரத்தில் தக்கவைக்கக் கூடாது.
அடர்பச்சை நிறத்திலிருந்து வெளிறிய பச்சை அல்லது மஞ்சள் கலந்த பச்சை நிறமாக மாறும்போதே அறுவடை செய்ய வேண்டும். ஒட்டுக் கட்டிய ஒரு மரத்திலிருந்து 350 கிலோவரை மகசூல் கிடைக்கும். 5 முதல் 7 ஆண்டுவரை தொடர்ந்து மகசூல் கிடைக்கும். நாற்றுகள் மூலம் சாகுபடி செய்யப்படும் ஒரு மரத்திலிருந்து 90 கிலோ பழங்கள் கிடைக்கும்.