கொய்யா சாகுபடி:
உரம், சத்து மேலாண்மை:
undefined
100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து, 40 கிராம் பொட்டாஷ் ஆகிய உரங்களை நட்ட 6ஆம் ஆண்டில் கொடுக்க வேண்டும். தழைச்சத்து, பொட்டாஷ், சாம்பல் சத்தை இரு பாகங்களாக முறையே ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் அளிக்க வேண்டும்.
நுண்ணூட்ட சத்துகள்: பூக்கள் பூக்கும் முன்பு போரிக் அமிலம் (0.1), ஜிங்க் சல்பேட் போன்ற கலவையை இலை வழியாக தெளிப்பதன் மூலம் பழத்தின் அளவு, மகசூலை அதிகரிக்க முடியும். காப்பர் சல்பேட் (0.20.4) தெளிப்பதன் மூலம் தாவரங்களின் வளர்ச்சி, மகசூலை அதிகரிக்கலாம்.
பின்செய் நேர்த்தி:
களைகள் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்தி 30 முதல் 40 சதவீதம் வரை மகசூலைக் குறைக்கிறது. களைக்கொல்லியாக கிராமக்சோன் தெளிக்க வேண்டும். பழத்தோட்டத்தில் மண் வளத்தை மேம்படுத்த 2 முதல் 3 முறை நிலத்தை உழ வேண்டும். மேலும், ஆண்டுக்கு 2 முறை மூடாக்கு காகித விரிப்பு மூலம் மண்ணின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கலாம்.
ஊடுபயிர்கள்:
பயறு வகைப் பயிர்களான பச்சை பயிர், உளுந்து, தக்காளி மற்றும் பீட்ரூட் ஊடுபயிர்களாக தொடக்கக் காலகட்டங்களில் பயிரிடுவதன் மூலம் அதிக வருமானம் பெறலாம். சாம்பல் பூசணி, வெள்ளரி, அன்னாசி, பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிடலாம்.
கவாத்து, சீரமைப்பு:
கொய்யா மரங்களில் கவாத்து செய்வதன் மூலம் பழத்தின் தரம், மகசூலை அதிகரிக்க முடியும். காய்களைத் தாங்குவதற்கேற்ப கிளைகளின் வலுவான கட்டமைப்பை உருவாக்குகிறது. இதற்காக, தரைமட்டத்திலிருந்து வெளியே வரும் தளிர்களை 30 செமீ வரை துண்டிக்க வேண்டும். மேலும், 4 தூக்குக் கிளைகளை வளரவிட்டு நடுப்பகுதியைத் திறக்க வேண்டும்.