நெற்பயிரில் மேற்கொள்ள வேண்டிய பூச்சிக் கட்டுப்பாட்டு மேலாணமை முறைகள் இவைதான்...

Asianet News Tamil  
Published : May 29, 2018, 02:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
நெற்பயிரில் மேற்கொள்ள வேண்டிய பூச்சிக் கட்டுப்பாட்டு மேலாணமை முறைகள் இவைதான்...

சுருக்கம்

insects management in paddy techiniques

நெற்பயிரில் மேற்கொள்ள வேண்டிய பூச்சிக் கட்டுப்பாடு மேலாண்மைகள்...

பூச்சிகளைக் கட்டுப்படுத்த பின்வரும் மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தலாம். பின்வரும் இலை. தழைகள் பூச்சிகளை விரட்டப்பயன்படும். இவை சாதாரணமாக நமது வயல்வெளிகளில் எங்கும் கிடைக்கும்.

1.ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் – ஆடுதொடா, நொச்சிபோன்றவை.

2. ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் -எருக்கு, ஊமத்தை போன்றவை.

3.கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் – வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.

4. உவர்ப்புச் சுமைமிக்க இலை தழைகள் – காட்டாமணக்கு, போன்றவை.

5. கசப்பு, உவர்ப்புச் சுவைமிக்க விதைகள் – கடுக்காய், வேப்பங்காய், எட்டிக்காய் இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.

இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஒவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறி கின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை. மூலிகைகளும், சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. 

பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இன்னும் பூச்சிகள் தவறித் தின்றுவிட்டு வயிற்றுக்குள் தொல்லை ஏற்பட்டு இறந்துவிடுகின்றன.இதனால் முட்டை பொரிப்பது குறைந்து விடுகிறது, இனப் பெருக்கம் தடைப்பட்டுவிடுகிறது, எண்ணிக்கையும் குறைந்து விடுகிறது, தப்பியவை ஊனமடைகின்றன, இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திச் சென்று விடுகின்றன.

மாதிரி அளவு...

சோற்றுக் கற்றாழை அல்லது பிரண்டை எருக்கு அல்லது ஊமத்தை நொச்சி அல்லது பீச்சங்கு அல்லது சீதா இலை வேம்பு அல்லது புங்கன் உண்ணிச் செடி அல்லது காட்டாமணக்கு அல்லது ஆடாதொடா மேலே சொன்ன தழைகளில் ஒவ்வொன்றிலும் 2 கிலோ எடுத்துக் கொள்ளவும். 

ஆக 10 கிலோ இலைகளுடன் முதலில் சொன்ன விதைகளின் ஏதாவது ஒன்றை (கடுக்காய் 1 கிலோ, வசம்பு 200 கிராம், வேப்பங்காய் 2 முதல் 3 கிலோ, எட்டிக்காய் 500 கிராம்) எடுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இவற்றைக் கலந்து ஊறல் முறையிலும், வேகல் முறையிலும் விரட்டிகள் தயாரிக்கலாம். 

ஊறல் முறை இலைகளையும், விதைகளையும் 2 கிலோ வீதம் எடுத்து துண்டு செய்து இடித்து இலை மூழ்கும் அளவிற்கு 12 லிட்டர் மாட்டுச் சிறுநீர் 3 லிட்டர் சாணக் கரைசல் சேர்த்து 7 முதல் 15 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். இதனால் இலைகள் கரைந்து கூழாக மாறிவிடும். இத்துடன் 1 லிட்டர் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து பயிர்களில் அடிக்கலாம்.

வேகல் முறை... 

இம்முறையில் ஏற்கனவே சொன்ன அளவில் இலைகளையும், விதைகளையும் எடுத்து துண்டு செய்து இடித்து முழுகும் அளவிற்கு ஏறத்தாழ 20 லிட்டர் நீரை ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் சீராக நெருப்புக் கொடுத்து வேகவிட வேண்டும். வெந்த பின்பு சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் மீண்டும் 20 லிட்டர் நீரைச் சேர்த்து நன்கு கலக்கி சாறை வடிகட்டி எடுக்க வேண்டும். இதேபோல மொத்தம் 5 முறை வடிகட்டி எடுக்கலாம். இதன் மூலம் 100 லிட்டர் சாறு கிடைக்கும். 

சாறு ஆறிய பின்னர் ஒரு லிட்டர் மஞ்சள்தூள் சேர்த்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இச்சாற்றைக் கைத் தெளிப்பால் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Succulent Plants: உங்க வீட்டுக்கு ஒரு Luxury Villa லுக் வேண்டுமா? இந்த 5 செடிகளை வையுங்க!
Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!