1.. ஆவூட்டம்
ஆவூட்டம் என்பது பசுவின் (ஆவின்) ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகியவற்றைச் சேர்த்து ஊற வைத்துச் செய்யும் கலவை. பசுமாட்டுச் சாணம் 5 கிலோ மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர் 15 நாட்கள் புளிக்க வைத்த தயிர் 2 லிட்டர்
undefined
பால் 2 லிட்டர், நெய் 500 மி.லி. இவற்றுடன் பனங்கருப்பட்டி அல்லது நாட்டுச் சக்கரை (வெள்ளைச் சீனி சேர்க்கக் கூடாது)1 கிலோ அரசம் பழம் 500 கிராம் - 1 கிலோ இளநீர் 3 முதல் 5 எண்ணம், வாழைப்பழம் 10 முதல் 15 எண்ணம் ஆகியவை தேவை
சாணத்தையும், உருக்கி ஆறிய நெய்யையும் நன்கு பிசைந்து 4 நாட்கள் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். தினமும் ஒருமுறை இதைப் பிசைந்து கொடுத்து வரவும். பின்னர் இக்கலவையுடன் மாட்டுச் சிறுநீர், பனங்கருப்பட்டியை தேவையான நீரைச் சேர்த்து 5 லிட்டர் ஆக்கிக்கொண்டு மண்பானையில் ஊறவிட்டுவிடவேண்டும்.
15 நாட்களுக்கு நாள் தோறும் 3 முறை கலக்கி வர வேண்டும். 16 ஆம் நாள் இதுவரை (தனியாக) புளித்த தயிரையும், பாலையும் இத்துடன் கலந்து பாத்திரத்தில் கரைத்துவிட வேண்டும். மேலும் 7 நாட்கள் ஊறவிட வேண்டும். நாள்தோறும் 3 முறை கலக்கிவர வேண்டும்.
இருபத்திரண்டு நாட்களில் ஆவூட்டம் உங்கள் முன்னால் மிகச் சிறந்த மணத்துடன் இருக்கும். இதை 35 முதல் 50 லிட்டர் நீரில் 1 லிட்டர் கலந்து (2% முதல் 3%)தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். நீர் பாய்ச்சும்போது வாய்க்கால்களில் கலந்து விடலாம். இது நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது, வளர்ச்சியைத் தூண்டி விடுகிறது.
பூச்சிகளை விரட்டியடிக்கிறது. பயிரில் நோய் எதிர்ப்பஆற்றலை வளர்க்கிறது. (கோயில்களில் தரப்படும் பஞ்சகவ்யா என்ற பொருள் ஊற வைக்கப்படுவதில்லை. அத்துடன் ஐந்து பொருட்கள் மட்டுமே பயன்படும், அளவும் மாறுபடும்). பசுவின் ஐந்து பொருட்கள் மட்டுமல்லாது எருமை, ஆடு போன்ற கால்நடைகளின் பொருட்களில் இருந்தும் இந்த நொதிப்புச் சாற்றை உருவாக்கலாம்.
2.. அரப்புமோர்க் கரைசல்
இதற்கு அடுத்தபடியாக மூன்றவதாக அரப்புமோர்க் கரைசல் தெளிக்க வேண்டும் இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே. அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 1 முதல் 2 கிலோ பறித்து வந்து,
தேவையான நீர் சேர்த்து, நன்கு அரைக்கவும். அதில் இருந்து 5 லிட்டர் கரைசல் எடுத்து அதனுடன் 5 லிட்டர் புளித்த மோரைச் சேர்க்க வேண்டும். இக்கலவையை 7 நாட்கள் நன்கு புளிக்கவிட வேண்டும்.
இதன் பின்னர் கரைசலை எடுத்து ஒரு லிட்டருக்குப் பத்துலிட்டர் நீர் சேர்த்து பயிருக்குத் தெளிக்கலாம். இது பயிர்களை வளர்க்கின்றது. பூச்சிகளை விரட்டுகிறது. பூசண நோயைத் தாங்கி வளர்கிறது. இதில் ஜிப்பர்லிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியின் திறன் உள்ளது.
3.. தேமோர் கரைசல்
நெல் பயிரில் பூட்டை வெளிவரும் நேரத்தில் (ஙிஷீஷீt றீமீணீயீ stணீரீமீ) நெற்பயிர்கள் நன்கு வாளிப்பாக வளர்ந்து வருவதற்கும் பூக்கும் திறன் அதிகரித்து நெல்மணிகள் திரட்சி அடையவும் கீழ்க்கண்ட தேமோர் கரைசல் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளிக்க வேண்டும். இதற்கடுத்த வளர்ச்சி ஊக்கி தேமோர் கரைசல். தேங்காய்ப்பால் மோர் கலந்த கலவைக்கு இப்பெயர்.
நன்கு புளித்த மோர் 5 லிட்டர், 10 தேங்காய்களை உடைத்து எடுக்கவும். தேங்காயிலுள்ள தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை துருவி எடுத்து தேவையான நீர் சேர்த்து நன்கு ஆட்டி பால் எடுக்கவும். இத்துடன் முன்பு எடுத்து வைத்த தேங்காய் நீரையும் கலந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கலவை 5 லிட்டர் வருமாறு இருக்க வேண்டும். கொஞ்சம் குறைவாக இருந்தால் 5 லிட்டர் வரும் வகையில் நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக்கலவையை ஒரு மண்பானையில் 7 நாட்களுக்கு ஊறவிட வேண்டும். கலவை நன்கு நொதித்துப் புளித்து வரும். இப்போது கலவையை எடுத்து 1 லிட்டருக்கு பத்து லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்.
இதற்கு பயிர்களை வளர்க்கும் ஆற்றலும், பூச்சிகளை விரட்டும் குணமும் பூசண நோயைத் தாங்கி வளரும் தன்மையும் உண்டு. பயிர்களின் பூக்கும் திறன் அதிகரிக்கிறது. இந்தக் கரைசல் சைட்டோசைம் என்று அழைக்கப்படும் வளர்ச்சி ஊக்கிக்குச் சமமான ஆற்றலைக் கொண்டது. மிக எளிய முறையில் இக்கரைசலைத் தயாரிக்கலாம்.