தென்னங்கன்றில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த இந்த முறைகள் உதவும்...

 |  First Published Apr 1, 2017, 11:30 AM IST
insect affects in coconut tree



தென்னங்கன்றுகளை கரையான் மற்றும் நூற்புழு தாக்கி சேதப்படுத்தும்.

இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த இளம் தென்னங்கன்றுகளுக்கு அருகில் சோற்றுக் கற்றாழை கன்றுகளை பயிரிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வேர்களைத்தாக்கும் கரையான் மற்றும் நூற்புழு பாதிப்பிலிருந்து தென்னங்கன்றுகளைப் பாதுக்காக்கலாம்.

Tap to resize

Latest Videos

தென்னையில் நோய்த் தடுப்பு வழிமுறைகள்:

1.. காண்டாமிருக வண்டு கட்டுப்படுத்த:

ஒரு பங்கு போரேட் குருணை மருந்தை 10 பங்கு குறு மணலுடன் கலந்து குருத்துக்குக் கீழேயுள்ள மூன்று வரிசை மட்டை ஒடுக்குகளில் இட்டால், இந்த வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இந்த மருந்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இடுவது சிறந்தது.

2.. சிவப்புக்கூண் வண்டு கட்டுப்படுத்த:

இந்த வண்டு தாக்குதலை முன்கூட்டியே தடுக்க மோனோகுரோட்டோபாஸ் 10 மில்லியுடன், அதே அளவு தண்ணீர் கலந்து மரத்தின் வேர் மூலம் 45 நாள்கள் இடைவெளியில் இரண்டிலிருந்து மூன்று முறை இடவேண்டும்.

இந்த வண்டு தாக்கிவிட்டால் அது ஊடுருவிய துவாரத்தின் வழியாக இரண்டு அலுமியம் பாஸ்பைடு மாத்திரைகளை போட்டு துளைகளை மணல் சிமெண்ட் கலவை கொண்டு அடைக்கவேண்டும். ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரு மாத்திரையை துளையில் இட்டு அடைக்கலாம்.

click me!