வெள்ளாடு வளர்ப்பு தொழில் பற்றிய தகவல்கள்…

 |  First Published Dec 30, 2016, 1:07 PM IST



பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த பயிரை வெள்ளாடுகள் உட்கொள்ளல், எதிர்பாராமல் பூச்சிக் கொல்லி மருந்துகள், தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டியில் கலந்து விடல், நச்ச்சுத்தன்மையுடைய செடிகளை மேய்ந்து விடுவதால் உடம்பில் நச்சுத்தன்மை ஏற்படலாம்.

இதற்கு முதலுதவியாக நஞ்சு அல்லது விஷம் வயிற்றில் தங்காமல் இருக்க உப்பு கரைசல் அல்லது சோப்பு கரைசலை வாய் வழியாக கொடுக்கலாம். மேலும் அடுப்பு கரியை பொடி செய்து தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

Tap to resize

Latest Videos

ஆட்டுக் கொட்டகைகளில் தீப்பிடித்தால் உடம்பில் தீக்காயம் ஏற்படலாம். ஆட்டின் உடம்பில் தீப்பிடித்து எரிந்தால், அடர்த்தியான போர்வை அல்லது சாக்கு பை கொண்டு போர்த்த வேண்டும்.

பின்பு சுத்தமான தண்ணீர் ஊற்றி காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தீப்பிடிக்காத பொருட்களை கொண்டு கொட்டகைகளில் மேற்கூரைகள் அமைக்க வேண்டும்.

ரசாயன திரவங்கள் உடம்பில் பட்டால் தோல் மற்றும் தசை வெந்து விடும். அமில வகை திரவங்கள் உடம்பில் பட்டால் சோப்பு தண்ணீர் அல்லது சோடா உப்பு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

காரவகை திரவங்கள் உடம்பில் பட்டால் வினிகர், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எந்த வகை ரசாயனம் என தெரியாமல் இருந்தால் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

click me!