கால்நடை பண்ணைகளை மேம்படுத்த உதவும் தீவன பயிர்…

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 01:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
கால்நடை பண்ணைகளை மேம்படுத்த உதவும் தீவன பயிர்…

சுருக்கம்

கால்நடை பண்ணைகளை மேம்படுத்தவும் மற்றும் பால் உற்பத்தியை பெருக்கும் தீவன முறையை 1800 – ஆம் ஆண்டு முதல் ஜரோப்பா நாடு ஆராய்ச்சி செய்து வருகிறது.

இந்த முறையினை தற்போது உலகின் மத்திய மேற்கு பகுதியில் செயல்படுத்தி வருகிறது.

இந்த முறையை காட்டிலும் புதிய முறையில் தீவன பயிரினை எப்படி உற்பத்தி செய்வது என்பதனை USDA (United States Department of Agriculture scientist in madison) விரிவாக கூறியுள்ளது.

இந்த வகை தீவன புல்லின் பெயர் Hidden valley ஆகும். இந்த வகை தீவன பயிர் பெரும்பாலும் மலை உச்சிகளிலேயே பயிரிட முடியும். ஆனால் USDA (United States Department of Agriculture) அனைத்து சமவெளி பகுதிகளிலும் பயிரிட முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளனர்.

இந்த முறையை விவசாயிகள் பயன்படுத்தினால் அதிக எண்ணிக்கையில் மாட்டு பண்ணையை உருவாக்கலாம். இந்த தாவரமானது USDA (United States Department of Agriculture) அமைப்பு ஆராய்ச்சி செய்து பயிரிடப்படுகிறது.

U.S Diary Forage Research Centre – ல் கேஸ்லர் மற்றும் அவர்களின் குழுவில் உள்ள அனைவரும் பல்வேறு நாட்களாக இதை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு  எங்கு இந்த புல் வளரும் என்பதை கண்டுபிடித்தனர்.

அதுமட்டுமல்லாது இந்த புல்லை கால்நடைகளுக்கு கொடுத்தால் மிக விரைவாக செரிமாணம் ஆகும் என்றும் மற்ற புல்லை காட்டிலும் அதிக அளவு ஆற்றல்  உடையதாக இருப்பதால் அதிகமாக பால் உற்பத்தியை கொடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த வகை தீவன பயிரைப்பற்றி DNA ஆய்வு செய்து பார்த்ததில் இந்த வகை புல் மிசிசிபி ஆற்றங்கரையில் 1800 – ஆம் ஆண்டுகளிலிருந்தே உருவாகி இருக்க கூடும் என்று கருதுகின்றனர்.

இந்த புல் மித வெப்ப மண்டலத்திலேயே வளர கூடியது. இது காற்றுபோகாத சமவெளியில் நன்கு வளரும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!