சிறிய பரப்பில் அதிகமான மரங்கள் வளர்த்தால் அவைகளின் வளர்ச்சி சிறப்பாக அமையாது என்பார்கள். ஆனால், இவர் நிலத்தில் இந்த கருத்து பொய்யாகி இருக்கிறது. குறுகிய காலத்தில் எல்லா மரங்களுமே நன்றாக செழிப்பாக வளர்ந்திருக்கிறது.
இரண்டு வயதே உள்ள மகோகனி, குமிழ்தேக்கு, வேங்கை, செஞ்சானம், ரோஸ்வுட் உ்ள்ளிட்ட மரங்கள் வளமாக வளர்ந்து நிற்க தோட்டத்தைச் சுற்றிலும் தென்னை, பனை, பூவரசு, வேம்பு, சுிசு மரங்களும் அலங்கரித்து நிற்கின்றன ராமுவின் தோட்டத்தில்.
இரண்டு வருடத்திற்கு முன்பு வரை நெல் சாகுபடி செய்த நிலம்தான் இது. இப்பொழுது செழிப்பான தோட்டமாக அளிப்பதற்கு காரணமே முறையான திட்டமிடல் தான் என்ற ராமுவின் மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.
மொத்தம் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. இது வண்டல் மண் பூமி. முழுக்க இரசாயன முறையில் நெல் விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறார். மரம் வளர்ப்பிலேயும், இயற்கை விவசாயத்திலேயும் ஆர்வம் ஏற்பட்டதால், இரண்டு ஏக்கரில் மட்டும் மரங்கள் வளர்க்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். ஏற்கனவே இந்த இரண்டு ஏக்கரை சுத்தி, வேலி ஓரத்தில் 40 வயதுள்ள 50 பனை: 10-15 வயதுள்ள 100 பூவரசு, 25 வேம்பு: 3 வயதுள்ள 80 தென்னை என்று இருக்கிறது. இப்பொழுது 300 பூவன் வாழை மரங்களும் வேலியில் இருக்கிறது. பொதுவாக வேலியோர மரங்களும் மாட்டு எரு கூட, கொடுப்பதில்லை. வாழைக்கும் கூட அப்படித்தான். அதனாலும்கூட, இந்த வாழை, மரங்கள் பூச்சி, நோய்த் தாக்குதல் இல்லாமல், திடகாத்திரமாக வளர்கிறது. மடல்கள் நன்றாக பரந்து விரிந்து, எப்பவும் பசுமையாக இருக்கிறது. இப்பொழுதுதான் தார் போட்டு, முதல் தாம்பு அறுவடைக்கு வந்திருப்பதாக கூறுகிறார். ஒரு தாருக்கு 225 காய்கள் வரை இருக்கிறது. பழங்கள் நல்ல சுவையுடன் உள்ளது. இந்தப் பழங்கள் 15 நாட்கள் வரை கெட்டுபோவதில்லை என்று சொன்னவர் புதிதாக மரம் வளர்ப்பில் இறங்கியதைப் பற்றிக் கூறுகிறார்.
இரண்டு ஏக்கரில்தேவையா அளவு குழி எடுத்து, 750 மகோகனி, 100 குமிழ்தேக்கு, 500 வேங்கை, 20 செஞ்சந்தனம், 500 ரோஸ்வுட், 750 முள்ளிள்ளா முங்கில் மரங்கள் என்று மொத்தமாக சேர்த்து 2 ஆயிரத்து 620 மரங்களை நடவு செய்திருக்கிறார். ஒவ்வொரு மரத்திற்கும் 6 அடி இடைவெளி விட்டு ஒரே வகையான மரங்கள் அடுத்தடுத்து இல்லாத மாதிரி நடவு செய்திருக்கிறார். அதிக எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதினாலட, நிறைய இலை தழைகள் உதிர்ந்து, மண் வளமாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, முள்ளில்லா மூங்கிலிலிருந்துஅதிக இலைகள் கிடைக்கிறது. இந்த மரங்களுக்கிடையில் வேறு மரங்கள் வைத்தோம் என்றால் சரியாக வளராது என்று சொல்லுவார்கள் ஆனாலும் எல்லா மரங்களும் நன்றாகத்தான் வளர்வதாக கூறுகிறார்.
முள்ளில்லா மூங்கிலில் பக்க வேர்கள் மட்டுமே இருப்பதனால், அது மண்ணிற்கு மேல் பகுதியில் உள்ள சத்துக்களை உணவாக எடுத்துக் கொள்கிறது. மற்ற வகை மரங்களுக்கு ஆணிவேர்கள் மட்டுமே அதிகமாக இருப்பதினால் இந்த மரங்கள் மண்ணிற்கு கீழ் உள்ள சத்துக்களை உணவாக எடுத்துக் கொள்கிறது. இங்கே உள்ள எல்லா மரங்களுமே சுமார் 10 முதல் 15 அடி உயரத்திற்கு வளர்ந்திருக்கிறது. கடுமையான கோடையிலும் கூட மரங்களில் கொ!சம் கூட வாட்டம் தெரிவதில்லை. நடவு செய்ததிலிருந்து முதல் ஒரு வருடம் வரைக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுத்ததாகவும், பிறகு மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க ஆரம்பித்ததாகவும் கூறுகிறார். களைகளை நன்றாக மண்ட விட்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை, குபேட்டா ஓட்டி, மண்ணுக்குள்ளேயே புதைக்கிறோம். இதனால், களைகள் நல்ல பசுந்தாள் உரமாக மாறிவிடுகிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்தையும் சுத்தி, தலா 5 கிலோ மாட்டு எரு போட்டுகிட்டு இருக்கோம்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை பக்க கிளைகளை மட்டும் ஒடித்துவிட்டு கவாத்து செய்கிறார். அதனால் மரங்கள் நேராக வளர்கிறது. எதிர்காலத்தில் மரங்கள் பெரிதானாலும், இடைவெளி அதிகமாக தேவைப்படும். மரங்களோட முதிர்வுக்கு ஏற்ப வெவஇவேறு கால கட்டங்களில் வெவ்வேறு மரங்களை வெட்டி விற்பனை செய்தால் மீதம் இருக்கும் மரங்களுக்கு தேவையான இடைவெளி கிடைக்கும் என்ற தொழில்நுட்பங்களை விவரித்த ராமு நிறைவாக, 7-ம் வரடம் முள்ளில்லா மூங்கில் குத்துகளில் சில மரங்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை அறுவடை செய்யலாம். 8-ம் ஆண்டு குமிழ்தேக்கையும், 15-ம் ஆண்டு மகோகனியையும், 12-ம் ஆண்டு வேங்கையையும், 30-ம் ஆண்டு செஞ்சந்தனம், ரோஸ்வுட் மரங்களையும் அறுவடை செய்யலாம் என்று அறுவடை பற்றிய தகவலொடு முடித்தார் ராமு.