காய்கறித் தோட்டம் ஒரு பார்வை…

 |  First Published Dec 29, 2016, 2:39 PM IST



உங்களுக்குத் தினமும் பூச்சி மருந்து தெளிக்காத புத்தம் புதிய காய்கறி வேண்டுமா? உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டி லும் காய்கறித் தோட்டம் தயார். முதலில் கொஞ்சம் வெயில் அதி கம் படும் இடமாகத் தேர்வு செய்யுங் கள். எந்த வகை மண் நல்லது? களி மண் இல்லாத பட்சத்தில் சரி. மண் கட்டிகள் இல்லாமல் சமன் செய்து கொள்ளவும். சிறந்த வடிகால் வசதி தேவை.
உங்கள் தோட்டத்தை நீங்களே வடிவமைக்கலாம். ஒரு சிறிய இடத்தில் நாற்றங்கால் எனக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாற்றங் காலில்தான் வெண்டை, மிளகாய், கத்திரி, தக்காளி எல்லாம் தன் முதல் 15 நாட்களைக் கழிக்கப்போகின்றன. இதுதான் உங்கள் “காய்கறிப் பயிரின் குழந்தைப் பருவம்”. நாற்றங்காலில் விதைகள் முளைத்து இலைகள் பரப்பி ஒரு 10 செ. மீ. வளர்ந்த பின் சிறிய இடைவெளி விட்டுப் பிடுங்கி நட்டுவிட லாம். ஒவ்வொரு காய்கறிக்கும் நடும் இடைவெளி வேறுபடும். வீட்டுத் தோட்டம் என்பதால் இடைவெளியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்
பொதுவாகக் கீரையை எடுத்துக் கொள்வோம். நாற்றங்கால் பெரிதாகத் தேவையில்லை. 25 முதல் 30 நாளில் வீட்டுத் தோட்டத்தில் கீரைதயார். கீரை விதைகளை விதைக்கும்போது கவனம் தேவை.எறும்புகள் தொல்லை தரும். அடியுரமாக நன்கு மக்கிய கம்போஸ்ட் உரங்களை (இயற்கை உரம்) இடுங்கள். தேவைப்பட்டால் கடலைப் பிண்ணாக்கு + வேப்பம் பிண்ணாக்கு கலந்து இடலாம். உங்களுக்கு எந்தக் கீரை வகை பிடிக்கிறதோ அதை நீங்கள் வீட்டுத் தோட்டத்தில் நடலாம் வெண்டை, கத்திரி, மிளகாய், தக்காளி இவை பொதுவாக ஒரு வயதுடைய காய்கறிப் பயிர்கள். இடைவெளி விட்டு நட்டுப் பயன்பெறலாம். இவை 45 முதல் 120 நாள் வøμ காய்கள் தரும். பூச்சித் தொல்லை இருப்பின் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். இரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் தவிர்ப்பது நலம்.
காய்கறி விதைகளைக் கடைகளில் விசாரித்து வாங்குங்கள். காய்கறிச் செடிகளை வளர்ப்பதற்காகத் தற்போது கன்டைனர்கள் உள்ளன. அவற்றையும் பயன்படுத்தலாம். புடலங்காய், பாகற்காய் இவையேயல்லாம் படரும் தாவரம். எனவே படர்வதற்குப் பந்தல் தேவை. கம்பு மற்றும் ஸ்டீல் கொண்டு நீங்கள் பந்தல் அமைக்கலாம். உங்கள் வீட்டின் வசதியைப் பொறுத்துப் படரும் தாவர காய்கறி வகைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். பழைய சாக்கு, பயனற்ற டிரம் இவற்றில் மண் நிரப்பி நீங்கள் வாழை, பப்பாளி வளர்க்கலாம். ஏன் மாமரம் கொய்யா கூட வளர்க்கலாம். உங்கள் வீட்டு மண் பொல பொல தன்மையுடையதா, சேனைக்கிழங்கு வளர்ப்பது நல்லது.
உங்களுக்குத் தேவையான உரத்தை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். எப்படி எனக் கேட்கிறீர்களா? வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய குழி (30 செ. மீ. ஆழத்தில்)எடுத்து அன்றாடம் வீட்டில் கிடைக்கும் மக்கும் குப்பைகளை அதில் கொட்டுங்கள். 90 120 நாள்களில் நன்கு மக்கிய இயற்கை உரம் தயார். சரி, வீட்டின் பின்புறத்தில் இடம் இல்லை என வருத்தப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள். மொட்டை மாடியில் காய்கறி வளர்க்க வழி இருக்கிறது. மொட்டை மாடியில் 30 45 செ. மீ. மண் கொட்டி காய்கறி வளர்க்கலாம். ஆனால் உங்கள் வீட்டின் மேற்தளம் வாட்டர் புரூப் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் ஷீட் 200 மைக்கரான் கனத்தில் மேற்கூரையில் பரப்பி பின் அதன் மேல் மண் கொட்ட வேண்டும். இதெல்லாம் ரிஸ்க் என நினைத்தால் இருக்கவே இருக்கிறது கன்டனைர்ஸ் மற்றும் பழைய சாக்கு, டிரம் போன்ற கருவிகள். மேற்கூரையில் மண் பரப்பி விட்டு நீங்கள் காய் கறித் தோட்டம் அமைக்கலாம். 12” உள் விட்டம் உள்ள தொட்டிகளைத் தேர்ந்தெடுத்துக் காய்கறி சாகுபடி செய்வது சுலபம். தொட்டிகளைத் தேர்ந் தெடுக்கும்போது அதில் நிரப்பப்படும் மண் கலவையை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
மூன்றில் ஒரு பகுதி செம்மண், ஒரு பகுதி சாதாரண மணல், மீதி ஒரு பகுதி நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கடைகளில் கிடைக்கும் கம்போஸ்ட்.நீங்கள் தேர்ந்தெடுக்கும் மண்தொட்டிகளின் அடியில் நீர் வெளியேற சரியான துளை உள்ளதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொட்டிகளைக் கிழக்கு மேற்கு திசையில் அடுக்கி வைத்தால் போதுமான சூரிய ஒளி கிடைக்கும். காய்கறித் தோட்டம், உடலுக்கு நல்லதென்றால் பூந்தோட்டம் மனதுக்கு சுகம் தரும்.
ரோஜா, மல்லிகை, செம்பருத்தி, குரோட்டன்ஸ் இவையெல்லாம் உங்கள் மாடித் தோட்டத்திற்கு அழகு சேர்க்கும். பச்சைப் பசேல் எனப் புல்வெளி கூட தோட்டக்கலை நிபுணர்களைக் கலந்தாலோசித்து நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். மாலை வேளையில் குடும்பத்தோடு களிக்க இந்தத் தோட்டம் மிக நல்லது. துளசி, இஞ்சி, புதினா போன்ற மருத்துவ குணம்கொண்ட மூலிகை செடிகளையும் தொட்டிகளில் வளர்க்கலாம். தோட்டங்கள் மனிதனின் மனதிற்கு புத்துணர்வு தருகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது என ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் வளரும் காய்கறிகள் இயற்கையானதும் நச்சுத் தன்மையற்றது என்பது மட்டுமல்லாமல், உங்கள் காய்கறித் தோட்டம் உங்களுக்கு ஓர் உடற்பயிற்சிக் கூடம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். தினமும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள பைபர் நார்ச்சத்து நம் ஜீரண சக்திக்கு மிகவும் அவசியம். சராசரியாக தினமும் 300 கிராம் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

Attachments area

Tap to resize

Latest Videos

click me!