வீட்டுத் தோட்டத்துக்கு மண் கூட தேவையில்லை!

First Published Dec 29, 2016, 1:31 PM IST
Highlights


இப்போதெல்லாம் நகர்ப்புறங்களில் அரை சென்ட் இடம் வாங்குவதற்கே இலட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்த சூழலில் வீடு கட்டி, காலியிடத்தில் அழகான தோட்டத்தை பராமரிப்பது என்பது வெறும் கனவு தான். ஆனால் 500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் வீட்டில் கூட அழகான தோட்டத்தை அமைக்க முடியும்.

இந்தியாவிலும் மண் இல்லாமல் தென்னை நார் கழிவு மற்றும் இடு பொருட்களை பயன்படுத்திவீட்டிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்து நார்வே மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தென்னை நார் கழிவு, நுண்ணுட்டச்சத்து, இயற்கை உரம் உள்ளிட்ட இடு பொருட்களை இணைத்து தேவையான பயிர்களின் உரங்களை போட்டு, இதற்கென பிரத்யேக பையில் போட்டு காய்கறி உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் முறைதான் இது.

கத்தரிக்காய், தக்காளி, வென்டைக்காய், மிளகாய், முள்ளங்கி உள்ளிட்ட அனைத்து காய்கறிகள், வெந்தயக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்ட அனைத்து கீரை வகைகள், பிரண்டை, கற்பூரவள்ளி, பார்வதி இழை உள்ளிட்ட அனைத்து மூலிகைச்செடிகள், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட அனைத்து பூ வகைகள் என தங்களுக்கு தேவையான அனைத்தும் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பயிருக்கும் தனித்தனி பைகள் வேண்டும்.

இந்த முறைக்கு சூரிய ஒளி வெளிச்சம் கிடைத்தால் மட்டும் போதும். நீர், உரம் போன்றவை குறைவாக இருந்தால் போதும். வீட்டில் சூரிய வெளிச்சம் படும் பகுதி, வீட்டு மொட்டை மாடி, வீடுகளுக்கு அருகிலோ என தங்களுக்கு தகுந்த இடத்தில் காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால் வீட்டுப் பெண்கள் காய்கறிகள் வாங்க அலைய வேண்டியதில்லை. அலைச்சல், பணவிரயம் போன்றவை மிச்சமாகும்.

எந்ததெந்த காய்கறி, எந்தெந்த வாசனை பயிர், மூலிகை பயிர், கீரை வேண்டும் என விரும்புகின்றீர்களோ அந்த பயிரின் விதை போட்ட பை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை போட்டால் போதும்.

தாங்கள் பயன்படுத்தும் காய்கறிகளை, தாங்களே சுகாதார முறையில் விளைவித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயற்கை விவசாயம் முறையில் பசுமை குடில் அமைத்து காய்கறி விளைவிக்கும் விதை உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கு தற்போது கோவை அருகே பாப்பம்பட்டியில் ஒரு தனி நிறுவனத்தையே நடத்தி வருகிறார்கள்.

ஐந்து நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தினர் வீட்டில் தங்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் உற்பத்தி செய்ய மொத்தம் 15 பைகள் (ஒரு பயிருக்கு ஒரு பை) வாங்கினால் போதும்.

 

click me!