கொட்டில் அமைச்சு ஆடுகளை வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும். 800 சதுர அடியில் தரையிலேயே சிமென்ட் போட்டக் கொட்டில் அமைச்சு, பக்க வாட்டுல கம்பி வலை போட்டு மேல உயரமா ஆஸ்பெஸ்டாஸ் கூரையும் போட்டால் கொட்டில் அமைப்பு ரெடி. குட்டிகளுக்கு தனியே ஒரு அறை.
பசுந்தீவனமா வேலிமசால், கோ3 புல்லெல்லாம் தோட்டத்துலேயே வளர்த்துகூட தீவனமாக கொடுக்கலாம்.
தினமும் அடர் தீவனமும் கொடுத்தா நல்லா வளரும். மேய்ச்சல் முறையில் வளர்க்கிறவ்பொ ஆறு மாசத்துக்கு பத்து, பதினோரு கிலோ வரை தான் எடை வரும். ஆனா, கொட்டில் முறையில் ஆறு மாசத்துக்குள்ள இருபது கிலோ வரை வந்துடும். நல்ல விலை கிடைக்கும். கிலோ 120 ரூபாய்ன்னு விலை வெச்சி ஆட்டைக் கொடுக்கலாம்.
ஒவ்வொரு பெட்டையும் எட்டு மாசத்துக்கு ஒரு தடவை குறைந்தபட்சம் ரெண்டு குட்டி போடும். அந்தக் குட்டிக்கு அடுத்த எட்டு மாதத்தில் குட்டி போட ஆரம்பித்துவிடும். சரியாக கருத்தரிக்காத ஆடுகள், குட்டி ஈனாத ஆடுகளை உடனடியாக கழித்து விடவேண்டும்.
தேவைக்கு அதிகமான கிடாக்களையும் கழிக்க வேண்டியது அவசியம். சரியான முறையில் மருத்துவம் மற்றும் அடர்தீவனங்கள் மேற்பட்ட ஆடுகளை விற்பனை செய்ய முடியும். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலே 8 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும்.
இருபது ஆடுகள் மற்றும் அதன் மூலம் குட்டிகள் ஆகியவற்றை வைத்து 40 மாதங்களில் கிடைக்கும் லாபக்கணக்கு இது. ஆண்டுக்கு கணக்கிட்டால், 2 லட்ச ரூபாய்க்கு மேல் வரும்படி கிடைக்கும். இளங்குட்டிகள் 200 எண்ணிக்கையில் நம்மிடம் இருக்குமாறு பராமரிக்கலாம்.
தரையிலிருந்து உயரமாக அமைக்கப்பட்ட மூங்கிலால் ஆன கொட்டில் போடுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். தரையிலேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் அமைத்தால் 75 ஆயிரம் ரூபாய் செலவாகும். கொட்டில் அமைக்கும் பொருட்களைகப் பொறுத்து விலை வித்தியாசப்படும்.