இந்த முறையில் சர்க்கரைச்சோள சாகுபடி செய்தால் மகசூல் அள்ளலாம்…

 |  First Published May 26, 2017, 12:56 PM IST
In this way the yield can be yielded if sugarcane is cultivated ...



இரகம்: எஸ்.எஸ்.வி 84

வயது: 110 – 115

Tap to resize

Latest Videos

பருவம்: தை, சித்திரை, ஆடி, புரட்டாசி

விதைப்பு:

விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கேப்டான் அல்லது திரம் பூஞ்சாண மருந்து அல்லது 4 கிராம் மெட்டாக்ஸில் மருந்துடன் கலந்து விதைப்பதால் அடிச்சாம்பல் நோயிலிருந்து பயிரைக் காப்பாற்றலாம்.

ஒரு எக்டேருக்குத் தேவையான விதைகளை 3 பாக்கெட் (600 கிராம்) அஸோஸ்பைரில்லம், 3 பாக்கெட் (600 கிராம்) பாஸ்போ பாக்டீரியம் அல்லது 6 பாக்கெட் (1200 கிராம்) அஸோபாஸ் நுண்ணுயிர்க் கலவையுடன் தேவையான அளவில் அரிசிக் கஞ்சி கலந்து விதைநேர்த்தி செய்யலாம்

பயிர்களின் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலைத் தவிர்க்க விதைகளை ஒரு கிலோ விதைக்கு 4 மிலி குளோர்பைரிபாஸ் (20 ஈசி) அல்லது 4 மி.லி. மானோகுரோட்டோபாஸ் (35 ஈசி) அல்லது 4 மி.லி. பாசலோன் (35 ஈசி) மருந்தினை 0.5 கிராம் ஒட்டும் பசையுடன் 20 மி.லி. நீரில் கலந்து கரைசலுடன் கலந்து பின் விதைகளை நிழலில் உலரவைத்து பிறகு விதைக்கலாம்

நிலம் தயாரிப்பு

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய நிலத்தை தேர்வு செய்து புழுதிபட நன்கு உழுது பின் 45 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைக்க வேண்டும்

ஒரு எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும்.இவ்விதைகளை விதை நேர்த்தி செய்த பின் 45 செ.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்ட பார்களுக்கு பக்கவாட்டில் செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளி விட்டு சுமார் 2 செ.மீ. ஆழத்தில் குழிக்கு 2 விதைகள் வீதம் விதைக்க வேண்டும் விதைத்த குழிகளை மணல் கொண்டு மூட வேண்டும்

குருத்து ஈ தாக்குதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் எக்டருக்கு 12.5 கிலோ விதைகளைப் பயன்படுத்தி, பூச்சிகளால் தாக்கப்பட்டு இளம் செடிகளை பயிர்கலைக்கும் சமயம் அகற்றிவிட்டோ அல்லது சிறிய நாற்றங்கால் விதைகளை விதைத்து அதில் சேர்க்கப்பட்ட நாற்றுகளை இடைவெளியில் நடவு செய்தோ பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கலாம்

உரமேலாண்மை

கடைசி உழவின் போது எக்டருக்கு 12.5 டன்கள் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும்

ஒரு எக்டருக்கு 10 பாக்கெட்டுகள் (2 கிலோ) அஸோஸ்பைரில்லத்துடன் 10 பாக்கெட் (2 கிலோ) பாஸ்போ பாக்டீரியம் அல்லது 20 பாக்கெட் (4கிலோ) அஸோபாஸ் நுண்ணுயிர்க் கலவையை இடவேண்டும்

ஒரு எக்டருக்கு சோளத்திற்கு இடவேண்டிய நுண்ணூட்டச்சத்து கலவையை 12.5 கிலோ அளவில் 50 கிலோ மணலுடன் கலந்து பார்களின் மேலாகத் தூவவேண்டும்

நிலத்தில் எடுக்கப்பட்ட மண்ணைப் பரிசோதனை செய்து அதற்குப் பரிந்துரை செய்யப்பட்ட அளவில் இரசாயன உரமிடுதல் அவசியம், பரிசோதனை செய்யாத நிலையில் ஒரு எக்டருக்கு சராசரிப் பரிந்துரையாக தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 40 கிலோ, சாம்பல் சத்து 40 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.

உரமிடும் காலம் மற்றும் அளவு

நுண்ணூட்டச்சத்து மற்றும் நுண்ணுயிர் உரம் ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்

பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்து அளவில் பாதியும், முழு அளவில்மணி மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இடவேண்டும்

பரிந்துரை செய்யப்பட்ட தழைச்சத்தில் 25 சதவீதம் அளவை முறையே விதைத்த 15 மற்றும் 30வது நாளில் மேலுரமாகவும் இடவேண்டும்

களைக்கட்டுப்பாடு

விதைப்பு செய்த மூன்று நாட்களுக்கு அட்ரசின் 50 சத நனையும் தூள் களைகொல்லி 500கிராம் வீதம் ஒரு எக்டேரில் தெளித்து (நிலத்தில் ஈரப்பதத்தில்) களைகளைக் கட்டுப்படுத்தலாம். பிறகு விதைத்த 45வது நாளில் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்

களைக்கொல்லியை பயன்படுத்தாத நிலையில் விதைத்த 15 முதல் 20 நாளில் ஒரு முறையும் பிறகு 30 முதல் 40வது நாளில் ஒரு முறையும் கைக்களை எடுக்கவேண்டும்

அறுவடை

சாகுபடி செய்யும் இரகங்களின் வயதை மனதிற் கொண்டு பயிரைக் கவனித்து வரவேண்டும். சுமார் 100 முதல் 110 நாட்களில் பயிர்கள் விதை முதிர்ச்சி அடைந்து விடும் இத்தருவாயில் தானியங்கள் வெளிர் நிறமடைந்து கதிருடன் சேர்ந்திருக்கு காம்பு பாகம் கருத்து காணப்படும். இதுவே அறுவடை செய்ய ஏதுவான தருணமாகும். சர்க்கரை ஆலைகளின் அனுமதி பெற்று அறுவடை செய்யலாம்.

கதிர்களைக் தனியாக அறுவடை செய்து வெயிலில் உலர்த்த வேண்டும்.

பசுந்தட்டைகளை அதன் அடியினில் வேர்பாகத்தைத் தவிர்த்து அரிவாள் கொண்டும் அறுவடை செய்ய வேண்டும். இலைகளை நீக்க வேண்டும்

click me!