கரும்பு நடவு முறையில் என்னென்ன தொழில்நுட்பங்களை மேம்படுத்தலாம்…

 
Published : May 26, 2017, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
கரும்பு நடவு முறையில் என்னென்ன தொழில்நுட்பங்களை மேம்படுத்தலாம்…

சுருக்கம்

What technologies can be improved in sugarcane planting method?

இயந்திர முறை நடவு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயந்திர நடவு கருவி எக்டருக்கு ரூ.3750/- சேமிக்க உதவுகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5 எக்டர் பரப்பளவு நடவு செய்கிறது.

மனித ஆற்றலைக் குறைக்கிறது மற்றும் விதை அளவு எக்டருக்கு 5 டன்னாக குறைக்கிறது.

இணைவரிசை நடவுமுறை

இணைவரிசை நடவுமுறையில் இரண்டு புறமும் கரணைகளை 150 + 30 செ.மீ இடைவெளியில் அஸ்ட்ராப் 8000 வகை (அறுவடை இயந்திரம்) கொண்டு அறுவடை செய்யுமாறு நட வேண்டும்.

150 + 30 செ.மீ இடைவெளியில் நியூ ஹாலண்ட் 4000 வகை அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யுமாறு ஒரு வரிசையில் நடவு செய்ய வேண்டும்.

நிலத்தடி சொட்டு நீர் பாசன முறை

நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பை பயிர் செய்யும்போது சொட்டு நீர் குழாய்களை 20 செ.மீ ஆழத்தில் வாய்க்காலில் பதிக்க வேண்டும்.

விதை கரணைகளை  சொட்டு நீர் குழாய்க்கு 5 செ.மீ மேல் இருக்குமாறு பதிக்க வேண்டும்.

செம்மை கரும்பு சாகுபடியில் 25-35 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை 5x2 அடி இடைவெளியில் விளைநிலத்தில் நட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.

பரந்த இடைவெளி

பரந்த இடைவெளி கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக தக்கைப் பூண்டு மற்றும் சணப்பை பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படும் மற்றும் களைகளை கட்டுபடுத்தலாம். இது இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் கரும்பு விளைச்சல் அதிகரிக்கிறது.

கடின மண்ணில் வரப்பில் கரணைகளை 80 செ.மீ இடைவெளியில் நடுவதன் மூலம் கரணை அழுகல்நோயை தவிர்க்கலாம் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

நடவு செய்த மூன்று நாட்களுக்குள் வரப்பின் எதிர் திசையில்10 செ.மீ இடைவெளியில் ரைசோபிம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை எக்டருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும்.

அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50-60 நாட்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும் மற்றும் நடவு செய்த 90-100 வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்துடன் மண் அணைக்க வேண்டும்.

சுழல் கலப்பை பொருத்திய எந்திரக் களையெடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும் மற்றும் சால் அமைக்கும் கருவி கொண்டு மண் அணைப்பதன் மூலம் ஆட்கள் செலவை சேமிக்கிறது மற்றும் தொழிலாளர் வேலைபளுவைக் குறைக்கிறது.   

நான்கு அடி வரிசை

ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வரி நடவு. மண்ணின் வளத்தை அதிகரிக்க ஊடுபயிராக தக்கைப் பூண்டு/ சணப்பை நடவு செய்ய வேண்டும்.  இது மேலும் இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது.    

கரணைகளை வரப்பின் ஒரு பக்கத்தில் நடவு செய்ய வேண்டும். வரப்பின் எதிர் புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட வரப்பில் ரைசோபியம் விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை 10 கிலோ/ எக்டர் விதைக்க வேண்டும்.

நடவு செய்த 50-60 நாட்களுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து கொண்டு பகுதி மண் அணைத்தல் வேண்டும்.

களையெடுக்கும் கருவி

களையெடுக்கும் கருவி கொண்டு களையெடுக்க வேண்டும் மற்றும் மண் அணைத்தல் மூலம் பணியாளர்கள் கூலி செலவைக் குறைக்கிறது மற்றும் மனித வேலைபளுவைக் குறைக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!