வேகல் முறையில் மூலிகை பூச்சி விரட்டி
இம்முறையில் ஏற்கனவே சொன்ன அளவில் இலைகளையும், விதைகளையும் எடுத்து துண்டு செய்து இடித்து முழுகும் அளவிற்கு ஏறத்தாழ 15 லிட்டர் நீரை ஊற்றி 2 மணி நேரம் சீராக நெருப்புக் கொடுத்து வேகவிட வேண்டும்.
undefined
வெந்த பின்பு சாறை வடித்து ஆறிய பின்னர் ஒரு படி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் கிடைக்கும் மொத்த வடிகரைசலுடன் 100 லிட்டர் நீர் சேர்க்கலாம். கைத் தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
இலைப்புள்ளி நோய் பாதித்த இலைகளின் மேற்புறம் நீண்ட கண்வடிவ புள்ளிகள் தென்படும். பின்னர் ஒன்று சேர்ந்து பெரிதாகி இலைகள் மஞ்சள் நிறமடைந்து கருகிவிடும். இதற்கு சோற்றுக் கற்றாழை 3 கிலோ, உண்ணிச் செடி இலைகள் அல்லது சீதாப்பழ இலை அல்லது பப்பாளி இலை 3 கிலோ எடுத்து இவ்விரண்டு இலைகளையும் 15 லிட்டர் நீரில் வேகவிட வேண்டும்.
10 விட்டர் அளவிற்கு சுண்டிய பிறகு 1 கிலோ மஞ்சள் தூள் கலந்து ஒருநாள் ஊறவிட வேண்டும். ஒருலிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் கலந்து இலைப்புள்ளி தென்படும் இலைகளின் மேல் படும்படி தெளிக்க வேண்டும்.
இந்த கரைசலுடன் 250 கி முதல்500 கி சூடோமானஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.