இயற்கை வேளாண்மையில் மூலிகைப் பூச்சி விரட்டி
பூச்சிகளைக் கொல்வது நமது நோக்கம் கிடையாது, அவற்றை விரட்டுவதே நோக்கம். இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரினங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.
undefined
பின்வரும் இலை. தழைகள் பூச்சிகளை விரட்டப்பயன்படும். ஆடு, மாடுகள் உண்ணாத இலை தழைகள் – ஆடுதொடா, நொச்சிபோன்றவை.ஒடித்தால் பால் வரும் இலை தழைகள் -எருக்கு, ஊமத்தை போன்றவை.
கசப்புச் சுவை மிக்க இலை தழைகள் – வேம்பு, சோற்றுக் கற்றாழை போன்றவை.உவர்ப்புச் சுமைமிக்க இலை தழைகள் – காட்டாமணக்கு, போன்றவை.கசப்பு, உவர்ப்புச் சுவைமிக்க விதைகள் – வேப்பங்கொட்டை, எட்டிக் கொட்டை இந்த வகையான செடிகளில் இருந்து ஊறல் போட்டு எடுக்கப்படும் சாறு அல்லது காய்ச்சி வடித்த நீர் போன்றவை மிகச் சிறந்த பூச்சி விரட்டியாகச் செயல்படுகின்றன.
இந்தப் பூச்சி விரட்டிகள் ஒருவித ஒவ்வா மணத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக புழுக்கள், பூச்சிகள் மணத்தைக் கொண்டுதான் பயிர்களைக் கண்டறிகின்றன. இதனால் மணம் பிடிபடாத காரணத்தால் அவற்றால் பயிர்களைத் தின்ன முடிவதில்லை.
மூலிகைகளும், சாணம், சிறுநீர் கரைசல்களும் வெறுப்பூட்டும் நெடியை ஏற்படுத்துவதால் பூச்சிகளும், புழுக்களும் விலகிச் செல்கின்றன. பல பூச்சிகள் உண்ணாமல் பட்டினி கிடக்கின்றன. இவற்றைப் பறவைகள் எளிதில் கொத்திச் சென்று விடுகின்றன.