குட்டி பெறும் காலத்தில் பெட்டை ஆடுகளுக்கு இந்தமாதிரி தீவனங்களைதான் கொடுக்கணும்…

 |  First Published Oct 11, 2017, 11:36 AM IST
In the time of the baby arrival the pet will give such sheep to the sheep.



** குட்டி பெறும் காலம் நெருங்கும் தருவாயில், தீவனத்தில் தானியங்களின் அளவை வெகுவாகக் குறைத்து, நல்ல தரமான உலர்புல் தீவனத்தை போதுமான அளவு அளித்தல் வேண்டும்.

** குட்டி ஈன்ற பின், பெட்டைகளின் தீவன அளவைப் படிப்படியாக அதிகரித்து, தீவனமளிப்பதை ஒரு நாளைக்கு ஆறிலிருந்து ஏழு முறையாகப் பிரித்து, அதன் மூலம் தேவையான முழுத் தீவனத்தை யும் அடையுமாறு செய்ய வேண்டும்.

Tap to resize

Latest Videos

** பொதுவாக, எளிதில் செரிக்கக்கூடிய தீவன மூலம் பொருட்களை கன்று ஈன்ற முதல் சில நாட்களிலேயே தீவனத்தில் சேர்க்க வேண்டும்.

** கோதுமைத் தவிடு மற்றும் பார்லி அல்லது ஓட்ஸ் அல்லது மக்காச் சோளம் 1:1 என்ற விகிதத்தில் சேர்த்தல் நல்லது.

** குட்டி ஈன்ற உடனேயே, பெட்டை ஆட்டிற்குப் போதிய அளவு மிதமான வெந்நீர் அளிக்க வேண்டும்.

** முதல் கட்டி ஈன்ற  பொழுதே, குட்டிகளுக்கான ஆரம்ப காலத் தீவனத்தை கணக்கிடத் துவங்கி விட வேண்டும்.

** ஒரு நிறைவான ஆரம்ப காலத் தீவனமென்பது, 16 பாகங்கள் வேர்க்கடலைப் பிண்ணாக்கு மற்றும் 84 பாகங்கள் பார்லி அல்லது மக்காச்சோள தானியங்கள் மற்றும் பசும் அல்லது உலர் தீவனப் பயிர் அடங்கியதாகும்.

click me!