** பெட்டைகளை அறுவடைக்குப் பின் உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பலாம். பசும்புல் ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 5 கிலோ என்ற விகிதத்தில் தீவனத்துடன் சேர்க்கப்பட வேண்டும்.
** சினைக் காலத்தின் இறுதி ஒரு மாதத்தின் போது, கருப்பையில் கருவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். தீவனத்தில் போதிய எரிசக்தி இல்லாவிடில், பெட்டைகள் சினைப்பருவ நச்சேற்றத்தினால் பாதிக்கப்படும்.
** கரும்புச் சர்க்கரை பாகு அல்லது தானியங்கள் (பார்லி, மக்காச்சோளம், ஓட்ஸ்) ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 225 கிராம் என்ற அளவில் வழங்கப்பட வேண்டும்.
** மேலும், பெட்டைகளுக்கு ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்கு 7 கிலோ பசும்புல் அளிக்கப்பட வேண்டும்.
** சினைக் காலத்தின் இறுதி 45 நாட்களுக்கும், 600 கிராம் தரமான பயிறு வகை உலர்புல் அல்லது 12லிருந்து 14 சதவிகிதம் செரிமான கச்சா புரதம் மற்றும் 65-லிருந்து 70 சதவிகிதம் மொத்த செரிமான சத்தடங்கிய அடர் தீவனம் 300 கிராமும் அளிக்கப்பட வேண்டும்.