திராட்சையில் அடிசாம்பல் நோயைக் கட்டுப்படுத்த போர்டோ கலவை எப்படி பயன்படுத்தணும்?

 |  First Published Jun 23, 2017, 12:36 PM IST
How to use the porous mixture to control anxiety in grapes



போர்டோ கலவை ஒரு நுண்ணு¡ட்டக்கலவை, இது அடிசாம்பல் நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

ஒரு சதவித போர்டோக் கலவை தயாரிக்கும் முறை:

Latest Videos

undefined

400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.    பின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவம்.

காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

கரைசல்கள் தயாரிக்க மண் பாத்திரம் அல்லது மர வாளிகளைத் தான், உபயோகப்படுத்த வேண்டும். உலோக பாத்திரங்கள் உபயோகப்படுத்தக்கூடாது.

கரைசல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு சக்தியைக் கரைசலில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். கத்தியில் செம்புழுப்புத் துகள்கள் காணப்பட்டால் மேலும் சுண்ணாம்பு இடவேண்டும். செம்பழுப்புத் துகள்கள் கத்தியில் படியாமல் இருக்கும் வரை சுண்ணாம்பு இடவேண்டும்.

இவ்வாறு தயாரித்த கலவையினை திராட்சை பந்தலில் கவாத்து வெட்டிய 2 நாட்கள் கழித்து ஒருமுறையும், துளிர்த்தவுடன் ஒருமுறையும், இலைகள் பெரிதானவுடன் ஒருமுறையும், பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், காய்பிடிக்கும் தருணத்தில் ஒருமுறையும் என ஐந்து முறைகள் தெளிக்க வேண்டும்.

click me!