துவரை விதைகளில் விதை தேர்வும், விதை நேர்த்தியும் எப்படி பண்ணலாம்? ஒரு அலசல்…

Asianet News Tamil  
Published : Jun 29, 2017, 12:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
துவரை விதைகளில் விதை தேர்வும், விதை நேர்த்தியும் எப்படி பண்ணலாம்? ஒரு அலசல்…

சுருக்கம்

How to Seed Seed and Seed Treatment A paragraph ...

துவரை விதைகளில் காணப்படும் சுருங்கிய விதைகள், முதிர்ச்சி அடையாத விதைகள், பூச்சி நோய் தாக்கிய விதைகள் ஆகியவற்றை நீக்கி நன்கு முளைப்புத்திறன் உள்ள வீரியமுள்ள சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.

விதை தேர்வு:

கடின விதைகளை கண்டறிய:

விதைகளை ஒருமணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். சிலவிதைகள் நீரை உறிஞ்சாது அப்படியே காணப்படும். அவ்வாறு நீர் உறிஞ்சாத விதைகள் கடின விதைகளாகும். அவற்றை நீக்கிவிட்டு மற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.

கடின விதைகளை நீக்குதல்:

விதை உற்பத்தியின்போது போதுமான தண்ணீர் கிடைக்காமை, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் கடின விதைகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்விதைகள் கல்போன்று கடினமாக இருக்கும். பொதுவாக சேமிப்பின் போது கடினத்தன்மை நீங்கிவிடும் எனினும் கடின விதை காணப்பட்டால் அவற்றை நீக்கிவிட வேண்டும்.

விதை நேர்த்தி;

இரசாயன விதை நேர்த்தி:

ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைகோடெர்மா விரிடி(அ) பத்துகிராம் சூடோமோனஸ் புளுரோசன்ஸ் எதிர் உயிர் பூஞ்சான மருந்து கொண்டு விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நிழலில் உலர்த்தி பின்பு விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

ரைசோபியம் விதை நேர்த்தி:

எதிர் பூஞ்சான கொல்லி கொண்டு விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் நுண்ணுயிர் கலவையைச் சேர்த்து சிறிது தண்ணீர் மற்றும் ஆறிய அரிசிக்கஞ்சி ஆகியவற்றை சேர்த்துக் கலந்து 15 நிமிட நிழலில் உலரவைத்து விதைப்பு செய்யலாம்.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!