பெரும்பாலும் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்வது பூக்களில் மகரந்த சேர்க்கை வழியில்தான். இந்த மகரந்த சேர்க்கையில் ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்கு மகரந்தம் செல்வதே அயல் மகரந்தசேர்க்கை எனப்படும்.
undefined
அரிசி, கோதுமை போன்ற புல்வகை தாவரங்களுக்கு பூக்கள் மிக சிறியதாய், கண்களுக்கு புலப்படாத அளவில் இருக்கும். மென்காற்று வீசும்போது பூக்களின் மகரந்தம் அடித்து செல்லப்பட்டு அடுத்த தாவரத்தில் படியும்.
இவ்வாறு இந்த வகை தாவரங்களில் மகரந்த சேர்க்கை இயல்பில் நடைபெற காற்று பெரிதும் துணை செய்கிறது. ஆனால் பல்வேறு காய், கனிகள் சாகுபடியில் குறிப்பாக பூசணி, பரங்கி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கனிகள் விளைச்சல் தரும் பூச்சிகளின் வாயிலான மகரந்த சேர்க்கை மிகவும் அவசியம்.
தேனீ, வண்டு, பட்டாம்பூச்சி போன்றவை விவசாயிகளுக்கு நன்மை தரும் பூச்சிகள்.
இவை, பூக்களில் தேன் எடுக்க ஒவ்வொரு பூவாக செல்லும்போது மகரந்தத்தை எடுத்துச் சென்று அயல் மகரந்தசேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது.