கோழிக் குஞ்சுகளைப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்?

 |  First Published Nov 4, 2017, 12:10 PM IST
how to protect chickens



 

** வயதான கோழிகளை விற்ற பிறகு பண்ணையினை நன்றாக சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

Tap to resize

Latest Videos

** இரண்டு குழு கோழிகளுக்கு இடையே 3-4 வார இடைவெளி இருக்க வேண்டும்.

** கோழிக்குஞ்சுகளைப் பாதுகாக்க 5 அடி அகலத்துடன் பாதுகாக்கும் அமைப்பினைக் கொட்டகையில் அமைக்க வேண்டும். 5 அடி அகலமுள்ள பாதுகாப்பு அமைப்பில் 200-250 கோழிக்குஞ்சுகளைப் பராமரிக்கலாம்.

** கோழிக்குஞ்சு பாதுகாப்பு அமைப்பின் மத்தியில் சூடாக்கும் ஆதாரமான அகச்சிவப்பு பல்புகள், அல்லது சாதாரண பல்புகள் அல்லது வாயு மூலம் சூடாக்கும் அமைப்புகளை அமைக்க வேண்டும்.

** இந்த பாதுகாப்பு அமைப்புக்குள் ஆழ்கூளத்தை 2 இஞ்ச் உயரத்திற்குப் பரப்பி அதன் மீது பழைய செய்தித்தாளை வைக்க வேண்டும்.

** வண்டிச் சக்கரத்தைப் போல தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளை கோழிக்குஞ்சு பாதுகாப்பு அமைப்பின் மத்தியில் வைக்க வேண்டும்.

** கோழிக் குஞ்சுகள் வருவதற்கு 24 மணி நேரம் அல்லது ஒரு நாளைக்கு முன்பாக கோழிக்குஞ்சு கொட்டகையின் வெப்பநிலையினை சரிபார்க்க வேண்டும்.

** கோழிக் குஞ்சுகள் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கோழிக்குஞ்சுக் கொட்டகையில் அமைக்கப்பட்டிருக்கும் சூடாக்கும் ஆதாரத்தை அடிக்கடி பரிசோதித்து அது சரியான வெப்பநிலையினை பராமரிக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

** ரவை அல்லது அரைக்கப்பட்ட மக்காச்சோளம் அல்லது நன்றாக அரைக்கப்பட்ட கோழிக்குஞ்சுத் தீவனம் போன்ற ஏதேனும் ஒன்றை கோழிக்குஞ்சு பாதுகாப்பு அமைப்பினுள் பரப்பப்பட்டிருக்கும் செய்தித்தாள் மீது ஒன்று அல்லது இரண்டு நாளைக்குப் போட வேண்டும். இதற்குப் பிறகு கோழிக்குஞ்சுகள் தானாகவே தீவனத்தட்டிலிருந்து தீவனம் உண்ணக் கற்றுக்கொள்ளும்.

** முதல் வாரத்தில் கோழிக்குஞ்சுக் கொட்டகையினுள் 90-95 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், பிறகு ஒவ்வொரு வாரத்திற்கும் 5 டிகிரி வெப்பநிலையினைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.

** குஞ்சுகள் வந்து 3 நாட்களுக்குப் பிறகு கோழிக்குஞ்சு பாதுகாப்பு அமைப்பிற்குள் போடப்பட்டிருக்கும் செய்தித்தாளை மாற்றி விட வேண்டும். பழைய உபயோகப்படுத்தப்பட்ட செய்தித்தாளை எரித்து விட வேண்டும்.

** பாதுகாப்பு அமைப்பினை குஞ்சுகள் வந்த 7-10ம் நாள் பருவ நிலைக்கேற்றவாறு எடுத்து விட வேண்டும். இவ்வாறு பாதுகாப்பு அமைப்பினை எடுக்கும் போது கோழிக்குஞ்சுக் கொட்டகையின் மூலைகள் வட்டமாக வளைந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கோழிக்கொட்டகைகளின் மூலைகளில் குஞ்சுகள் அடைந்து அவை இறக்க நேரிடும்.

** குஞ்சுகளின் வயதிற்கேற்றவாறு தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளை மாற்ற வேண்டும். 

** கோழிக்குஞ்சுகளின் முதல் 0-8 வார வயதில் அவற்றிற்கு 24 மணி நேரமும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத போது இருட்டுக்கு கோழிக்குஞ்சுகள் பழகுவதற்கேற்றவாறு ஒரு மணி நேரம் மட்டும் கொட்டகையில் விளக்குகளை அணைத்து விட வேண்டும்.

** மருந்து அளித்தல்; முதல் மற்றும் இரண்டாம் நாள் – தாது உப்புக் கரைசல், வைட்டமின்கள், 3-7ம் நாள் எதிர் உயிரி மருந்துகள் தேவைப்படும் மருந்துகளை தேவைக்கேற்றவாறு அளிக்கலாம்.

click me!