இயற்கை விவசாய முறையில் தீர்வு:
தொடர்ந்து இயற்கையுடன் பயோடைனமிக் முறையைப் பின்பற்றினால் இந்தப் பிரச்சினை வராது. கடைசியாக மண்ணை உழும்போது 50 கிலோ மண்புழு உரத்தில் 3 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை முன் கூட்டியே கலந்து 50 எம்.எல். இரண்டாம் நிலை எ.எம் (E.M) திறமி நுண்ணுயிரிக் கலவையில் 5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து மண்புழு உரத்தைப் புரட்டிக் கொடுத்து 48 மணி நேரத்திற்கு பின் இட்டுப்பாருங்கள்.
சூடோமோனசும் நூற்புழு அழுகலைக் கட்டுப்படுத்தும். இரண்டையுமே பயன்படுத்தாதீரிகள். விரிடி இருந்தால் சூடோமானாஸ் வேண்டாம். நடுவில் சில வரிசையில் செண்டு மல்லி நடலாம் நிழலுக்கு செம்பை (கருஞ்செம்பை) நடுவது மரபு.
பின்னர் முறையாக பஞ்சகவயம், மூலிகை பூச்சி விரட்டி தயாரித்து தெளிக்கலாம்.