நாற்றங்காலில் பூச்சி தாக்குதலை எப்படி தடுப்பது? நிர்வகிக்கும்  முறைகள் உள்ளே...

First Published Apr 14, 2018, 12:41 PM IST
Highlights
How to prevent pest attack in nursery Managing methods inside ...


நாற்றங்காலில் பூச்சி தாக்குதலை தடுக்க...

நாற்றங்காலிலுள்ள குமிழ்மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி, புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் குமிழ் நாற்றுகளின் தளிர்களையும், இலைகளையும் உண்ணும். 

மேலும் சாறு உறிஞ்களான அஸ்வினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒருசில குமிழ் நாற்றுகள் வாடி கருகிவிடும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த “என்டோசல்பான்” பூச்சிக்கொல்லியை 1லி நீரில் 10 ம.லி. கலந்து கைத்தெளிப்பான் மூலம் நாற்றுகளில் மீது அடித்தால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும். 

மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான தகசாவ்யா அல்லது வேம்புபால் அல்லது புகையிலை மற்றும் வேம்பு சோப்பு கரைசலை 1லிட்டர் தண்ணீரில் 30 மி.லி வீதம் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும் நாற்றங்காலில் நீர்தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும்பட்சத்தில் குமிழ்நாற்றுகளுக்கு வாடல் நோய் மற்றும் அழுகல் நோய் உண்டாகும். இந்நோய்களை கட்டுப்படுத்த பிளேன்டோமைசின் 0.1% என்னும் மருந்தை மண்ணின் வேர்பகுதிக்கு அருகே ஊற்ற வேண்டும்.
 

click me!