இடமாற்றம் செய்து தரம்பிரித்து அடுக்குதல் :
பாலித்தீன் பைகளில் விதைகள் முளைத்து 45வது நாள் பைச் செடிகளை இடமாற்றி தரம் பிரித்து அடுக்க வேண்டும். அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்தி விடவேண்டும். பின்பு 21 நாட்களுக்கு ஒரு முறை பை நாற்றுகளை இடமாற்றம் செய்து தரம் பிரித்து அடுக்க வேண்டும்.
undefined
மேலும் நாற்றங்காலில் நீர் தேங்கமால் பார்த்துக்கொள்ள வேண்டு்ம். நாற்றங்காலை சுகாதாரமான முறையில் பராமரித்தால் பூச்சி தாக்குதல் மற்றும் இதரநோய்கள் வருவதை கட்டுப்படுத்தலாம்.
பை நாற்றுகள் ஆரோக்கியமாக நன்கு வளர பஞ்சகாவ்யா கரைசலை 1 லிட்டருக்கு 30 மி்.லி. வீதம் கலந்து நாற்றங்கால் எழுப்பப்பட்ட 60 நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
தோட்டம் உற்பத்தி :
நான்கு மாத காலத்தில் குமிழ் நாற்றுகள் சுமார் 75 செ.மீ-1மீ உயரத்திற்கு வளர்ந்திருக்கும். இதுவே நடுவதற்கு உரிய சமயமாகும். நாற்றுகள் நடவு செய்ய வேண்டிய இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
நிலம் சமமாக இருப்பின் ஒரு சால் ஏர் உழுத பின்பு ஒரு ஏக்கர் பரப்பில் 5மீ X 5மீ இடைவெளியில் 45 செ.மீ X 45 செ.மீ X 45 செ.மீ அளவில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் முதல் மழையில் 160 குழிகள் எடுக்க வேண்டும். பின்பு செம்மண் மற்றும் வண்டல் மண் சம பங்கு கலந்து அத்துடன் 250 கிராம் கோழி உரம் அல்லது 2 கிலோ தொழு உரம் கலந்து எல்லா குழிகளிலும் பாதி அளவு நிப்பி விட வேண்டும் .
ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பருவ மழை கிடைத்தவுடன் பைசெடிகளை பாலித்தீன் பைகளை அப்புறப்படுத்திவிட்டு குழிகளில் நடவு செய்யவேண்டும். குழிகளின் மீதி பகுதியை குழிகளில் சுற்றியுள்ள மேல் மண்ணை கொண்டு நிரப்பி செடிகளை சுற்று இறுக்கமாக கால்களால் மண்ணை மிதித்துவிட வேண்டும்.