மண் வகைகள்
வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால் தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப் பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை (PH 6 - 8) மண்வகைகள் மிகவும் நல்லது.
நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது?
1.. நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் எக்டேருக்கு 10-15 டன்கள் நன்கு மக்கிய தொழு உரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை உழ வேண்டும்.
2.. நிலமானது உவராக இருந்தால் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப் பூண்டு, சணப்பு ஆகியவற்றை வளர்த்து பூப்பதற்கு முன் அப்படியே நிலத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
3.. செம்பொறை மண் இருக்கும் இடங்களில் வேர் வளர்ச்சி தடைபடும் என்பதால் 2 அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள குழியில் மக்கிய தொழு உரம், ஜிப்சம், நெல் உமிச் சாம்பல் ஆகியவை இட்டு நிரப்பி வாழை நடவு செய்ய வேண்டும்.
4.. தோட்டக்கால் நிலங்களில் 2 x 2 x 2 அடி உயரம் ஆழம், அகலமுள்ள குழிகளில் கார்போபியூரான் 30 கிராம டிஏபி 10 கிராம, புண்ணாக்கு 500 கிராம், மக்கிய தொழு உரம் 5 கிலோ ஆகியவற்றை இட்டு நிலட்தை தயார் செய்யலாம். பின் வாழை நடவு செய்யலாம்.