வண்டுகள், சாருண்ணிகளை கட்டுப்படுத்த
ஒரு ஏக்கர் திராட்சை பயிரிட்ட இடத்திற்கு 100 மில்லி பாயின்ட் என்ற மருந்தை (ஒரு டாங்க்கிற்கு 13 லிட்டர் தண்ணீர்) கலந்து தேவையான அளவுகளில் அடித்து கட்டுப்படுத்தலாம்.
வேர் பூச்சி கட்டுப்படுத்த
கிராம் பெவிஸ்டின் / பிரிஸ்டான் மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து காலை வேலைகளில் அடித்தும், பாதிக்கப்பட்ட கொடிகளை பிடுங்கி எரித்தும், கொடிகளை பிடுங்கிய இடங்களில் சுண்ணாம்புதூள் இட்டும், போர்டோ கலவையை ஊற்றியம் கட்டுப்படுத்தலாம்.
செவ்வட்டை நோயை கட்டுப்படுத்த
10 கிலோ திரவநிலை / தூள் நிலையிலுள்ள டிரைக்கோடர்மா விரிடியை மக்கிய எரு / தொழு உரம் 5 டன் கலந்து கொடி ஒன்றுக்கு 15 கிலோ வீதம் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
அல்லது 200 கிராம் வேப்பம் பிண்ணாக்கு இட்டு, பின்பு நீர் பாய்ச்சவேண்டும் மேலும் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்னும் பூஞ்சாணக் கொல்லியினை 15 செ.மீ ஆழத்தில் இடவேண்டும்.
மாவுப்பூச்சிக் கட்டுப்படுத்த
மிதையல் டெமட்டான் 25 இசி அல்லது மானோ குரோட்டோபாஸ் 36 டபிள்யூ எஸ்சி 1 லிட்டர் நீருக்கு 2 மி.ரி கலந்து தெளித்தோ அல்லது மீன் எண்ணெய் சோப்புடன் 25 கிராம் ஒரு லிட்டர் நீர் என்ற அளவில் கரைத்து அல்லது டைக்குளோரோவாஸ் 76 டபிள்யூ எஸ்சி ஒரு மில்லி லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறையில் மாவுப் பூச்சியினை கட்டுப்படுத்த மாவுப் பூச்சியினை உணவாக உட்கொள்ளும் புள்ளி வண்டுகளை செடி ஒன்றுக்கு பத்து வீதம் விட்டுக் கட்டுப்படுத்தலாம்.