அடர்தீவன தயாரிப்பு !
மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்கள் 40 சதவிகிதம் கடலை, எள், தேங்காய், சூரியகாந்தி, பருத்தி மற்றும் சோயா ஆகிய புண்ணாக்குகள் 25 சதவிகிதம். அரிசி மற்றும் கோதுமை தவிடு 30 சதவிகிதம். தாது உப்பு 2 சதவிகிதம். உப்பு 2 சதவிகிதம். ஊட்டச்சத்து கலவை 1 சதவிகிதம் இந்த அளவில் எடுத்துக் கொண்டு மாவாக அரைத்து, தண்ணீரில் பிசைந்து தினமும் குறிப்பிட்ட விகிதத்தில் கொடுக்கவேண்டும்.
கர்ப்பிணி ஆடுகளுக்கு கொஞ்சம் அதிகப்படியாகக் கொடுக்கலாம். மேற்சொன்ன பொருட்களில் விலைக் குறைவாக கிடைப்பவற்றை கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொண்டு, மற்றவற்றை குறைத்து சதவிகித அளவைப் பராமரிக்கலாம். அடர் தீவனம் கொடுக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. கொடுத்தால் ஆடுகளின் எடை சீக்கிரமே அதிகரித்து கூடுதல் லாபத்துக்கு வழிவகுக்கும்.
தினமும் காலையில கொட்டிலை சுத்தம் செய்யணும். ஒவ்வொரு கொட்டிலையும் சுத்தி சிமெண்ட் வாய்க்கால் எடுத்து ஒரு தொட்டிக் கட்டணும். ஆடுகளோட சிறுநீர், கொட்டிலைக் கழுவுற தண்ணியெல்லாம் அதன் மூலமா சேகரிச்சு தீவனப்பயிருக்கு உரமா உபயோகப்படுத்தலாம்.
கிடாவை தனியான தடுப்புல நீளமான கயித்துல கட்டி வைக்கணும். தீவனங்களை தரையில் போடாம பக்கவாட்டு மூங்கில்களில் கட்டி வெச்சுட்டா, தேவைப்படும் போது ஆடுங்க சாப்பிட்டுக்கும்.