யானை கொழுத்தால் வாழை தண்டு; மனிதன் கொழுத்தால் கீரை தண்டு’ என்பது பழமொழி.
அனைத்து வகை நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கீரைக்கு உண்டு. தற்பொழுது நமது உணவில் தவறாமல் இருக்கவேண்டிய ஒன்று. குறுகிய காலத்தில் விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்.
undefined
கீரை, விதைத்த இருபத்தி இரண்டாவது நாள் முதல் அறுவடை செய்யலாம். நகரத்துக்கு அருகில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் மிகவும் ஏற்ற பயிர். நகரத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் கீரையை தங்களது உணவில் தினமும் சேர்த்து கொள்கின்றனர். கிராமங்களில் அவ்வாறு இல்லை.
கீரையில் பல வகை உண்டு. அரைகீரை, சிறு கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி கீரை ஆகியவை பிரபலமானவை.
அரைகீரை மற்றும் பொன்னாங்கன்னி இவற்றை மறுதாம்பாக பல தடவை அறுவடை செய்யலாம். எல்லா பட்டங்களிலும் விதைக்கலாம். தண்ணீர் அதிகமாக தேவைப்படும் பயிர் கீரை.
அரைகீரையை ஒரு தடவை விதைத்து விட்டு பல முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம். தொடர்ந்து கீரை அறுவடை செய்ய வேண்டுமானால் முதலில் பத்து சென்ட் அளவிற்கு நிலத்தை பதப்படுத்தி, நன்கு புழுதி உழவு செய்து பின் தொழுஉரம் அடியில் இட்டு 6×3 என்ற அளவிற்கு மேட்டு பாத்திகளில் விதைகளை தூவி பிறகு மேல் பகுதியில் மண் மூடாக்கு இட்டு தண்ணீர் பாய்சவேண்டும்.
ஐந்தாம் நாள் முளைத்து விடும். கண்டிப்பாக களை எடுக்க வேண்டும். அதிக வெயில் காலமாக இருந்தால் வைக்கோல் மூடாக்கு இடலாம். அறுவடை முடியும் தருவாயில் மற்றும் பத்து சென்ட் ஆரம்பிக்கலாம். இப்படி செய்வதால் தொடர்ந்து கீரை கிடைக்கும்.
கற்பூரகரைசல் இரண்டு முறை தெளித்தால் பூச்சி தாக்குதல்களை முற்றிலும் தடுக்கலாம். மீன் அமிலம் தண்ணீரில் கலந்து பாய்ச்சும் போது வேகமான வளர்ச்சி கிடைக்கும்.
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் இரண்டு முறை பாசனத்தில் கலந்து விடுவதால் கவர்ச்சியான, திடமான கீரை கட்டுகளை பெறலாம்.
வைட்டமின் A கீரைகளில் அதிகமாக இருப்பதால் இதை உணவில் சேர்ப்பதால் கண் சம்பந்தமான வியாதிகளை கட்டுப்படுத்தலாம். தாது உப்புகளும் அதிகம் உள்ளன.
பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து நாற்பது நாள் தினமும் உண்பதால் கண் கோளாறுகள் முற்றிலும் நீங்கும்.
சிறு குழந்தைகளுடைய மூளை வளர்ச்சியில் கீரை முக்கிய பங்கு வகிக்கும் கீரைக்கு எல்லா காலத்திலும் மௌசு உண்டு,