ஆழ்கூள முறையில் கோழி வளர்ப்பு
இம்முறை உலகம் முழுவதம் பின்பற்றப்படும் முறை ஆகும்.
பயன்கள்
மூலதனம் குறைவு.
சுகாதாரமானது, அதோடு கோழிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
இதில் பயன்படுத்தப்படும் கூளமானது ரிஃபோஃபிளேவின் மற்றும் விட்டமின் பி 12 ஆகிய சத்துக்களை கோழிக்கு அளிக்கிறது.
நோய்க் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் எளிது.
உற்பத்தித் திறனை அதிகப்படுத்துகிறது.
நெல் உமி, உலர்ந்த இலைகள், நறுக்கிய வைக்கோல் மற்றும் வேர்க்கடலை தழைகள் போன்ற கிடைக்கும்பொருட்களை கூளமாக உபயோகிப்பதால் இடுபொருள் செலவு குறைவு.
ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை
கூளங்கள் அதிக ஈரம்படாமல் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
குறிப்பிட்ட அளவுக் கோழிகளையே வளர்க்க முடியும்.
நல்லக் காற்று வசதி இருக்கவேண்டும்.
கூளங்கள் வாரத்திற்கொரு முறை மாற்றப்படவேண்டும். ஏதேனும் ஈரமான கூளங்கள் இருப்பின் அவற்றிற்குப் பதில் புதிய உலர்ந்த கூளங்கள் போடப்படவேண்டும்.
ஒரு சரிவிகிதத் தீவனம் கோழிகளுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
கோடைக்காலத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே கூளங்கள் போடப்பட்டு தயார் செய்யப்படவேண்டும். அப்போது தான் சூட்டில் பாக்டீரியாக்கள் நன்கு செயல்புரிந்து கூளங்கள் தயாராகும்.
தண்ணீர் வைக்கும் இடங்களில் நீர்க்கூளத்தின் மீது சிந்தி ஈரமாக்கிவிடாதவாறு எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
வணிக ரீதியில் அளவில் வைப்பதை விடப் பெரிய பண்ணைகளே அதிக லாபம் தரக்கூடியவை, முட்டை உற்பத்திக்கு 2000 பறவைகள் கொண்ட பண்ணை அமைப்பு சிறந்தது.
இறைச்சிக்கென வளர்க்கப்படும் கோழிகள் வாரத்திற்கு 250 குஞ்சுகள் புதிதாக சேர்க்கப்படவேண்டும்.
கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்கவேண்டும். சில நாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம்.