கோழி வளர்ப்பின்போது கோழிகளை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

 |  First Published Jul 31, 2017, 12:24 PM IST
How to control chickens during chicken breeding?



1.. வெள்ளைக்கழிச்சல் நோய்

அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது. இரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.

Tap to resize

Latest Videos

முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரித்தல் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். பிற மனிதர்கள் உள்ளே வராமல் தடுத்தால் ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் இறந்த கோழிகளின் உடலை உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. அப்போது  தான் அவற்றை உண்ண வரும் காக்கைகள், கழுகு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாக்க முடியும்.

2.. குடற்புழு நீக்கம் செய்தல்

ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.

குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.

click me!