வான்கோழிகளில் இயற்கை முறையில் இனப்பெருக்கம்
** வான்கோழிச் சேவல், பெட்டையுடன் சேரும் போது அதன் இறகுகளை பரப்பிஅடிக்கடி ஒரு வித்தியாசமான ஒலி எழுப்பும்.
** இயற்கையான முறையில்இனப்பெருக்கம் செய்வதற்கு நடுத்தர வான்கோழிகளின் ஐந்து பெட்டைகளுக்கு ஒரு சேவல் வீதமும், பெரிய வான்கோழி இனங்களுக்கு மூன்று பெட்டைகளுக்கு ஒரு சேவல் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
** ஒரு வளர்ந்த பெட்டை வான்கோழியிடமிருந்து சராசரியாக 40 முதல் 50குஞ்சுகள் வரை உற்பத்தியை எதிர்பார்க்கலாம்.
** ஒரு வருடத்திற்க்கு மேற்பட்ட வான்கோழி சேவல்களை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவற்றின் விந்துக்களின் கருவூட்டும் திறன் குறைவாக இருக்கும்.
** பொதுவாக ஒரு சேவலை மட்டும் பெட்டை வான்கோழிகளுடன் நீண்ட நாட்களுக்கு இனவிருத்திக்கு வைத்திருந்தால், அது ஒரு குறிப்பிட்ட பெட்டையிடம் நெருக்கம் காட்ட ஆரம்பித்துவிடும்.
** இதனைத் தவிர்க்க இனவிருத்திக்கு பயன்படும் சேவலை பதினைந்து நாட்களுக்கொரு முறைமாற்ற வேண்டும்.