1.. வான்கோழிகளை பிடிக்கும் மற்றும் கையாளும் முறைகள்
** எல்லா வயதுடைய வான்கோழிகளையும் ஒரு குச்சியினைக் காட்டிஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லலாம். வான்கோழிகளைபிடிப்பதற்கு இருட்டான அறை நல்லது.
** இருட்டு அறைகளில் வான்கோழிகளின் இரண்டு கால்களையும் பிடித்து கொள்வதன் மூலம் பிடிக்கலாம். ஆனால் வளர்ந்த வான்கோழிகளை மூன்றிலிருந்து நான்கு நிமிடங்களுக்கு மேல் தலைகீழாக தொங்கவிடக்கூடாது.
** வான்கோழிகள் பொதுவாக பயந்த சுபாவமுடையவை. எனவே பண்ணைக்குள்வெளியிலிருந்து பார்வையாளர்கள் நுழைவதை கட்டுப்படுத்தவேண்டும்.
2.. அலகு வெட்டுதல்
** வான்கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்வதை தவிர்க்கவும், இறகுகளை பிடுங்கிக் கொள்வதைத் தடுக்கவும் அவற்றின் அலகுகளை வெட்டிவிட வேண்டும்.
** அலகுகளை பொறித்த நாளிலிருந்து, மூன்றிலிருந்து ஐந்து வாரங்களுக்குள் மூக்குத் துவாரத்திலிருந்து அலகின் நுனி வரை பாதியளவு அலகினை வெட்டிவிட வேண்டும்.
3.. வான்கோழிகளின் மூக்கிலிருந்து வளரும் சதைப்பற்றை நீக்குதல்
** வான்கோழிகளின் அலகின் அடிப்புறத்திலிருந்து வளர்ந்திருக்கும்சதைப்பகுதியினை நீக்குவதன் மூலம் வான்கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளும் போதும், சண்டையிட்டுக்கொள்ளும் போதும் அவற்றிற்கு ஏற்படும் தலைக்காயத்தினை தவிர்க்கலாம்.
** வான்கோழிகளின் பொறித்த நாளிலிலேயே விரல்களைக் கொண்டு அழுத்துவதன் மூலம் நீக்கி விடலாம்.
** பின்பு மூன்று வார வயதில் கத்தரிக்கோல் கொண்டு தலையை ஒட்டி, இச்சதைப்பற்றினை கத்திரிக்கவேண்டும்.
4.. வான்கோழிகளின் கால் விரல் நகங்களை வெட்டுதல்
** வான்கோழிகளின் பொறித்த நாளிலிலேயே அவற்றின் வெளிப்புறம் உள்ள நகத்தை வெட்டிவிட வேண்டும்.