வான்கோழிகளை கொட்டகையில் வளர்த்தால் கிடைக்கும் நன்மைகள்...

 |  First Published Feb 19, 2018, 1:26 PM IST
Benefits of breeding turkeys



வான்கோழிகளுக்கான கொட்டகை அமைப்பு

** கொட்டகைகள் வான்கோழிகளை வெயில், மழை, காற்று மற்றும் இதரவிலங்குகளிடமிருந்து பாதுகாத்து வசதியினை அளிக்கின்றது

** வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில், கொட்டகையின் நீளப் பகுதிகிழக்கிலிருந்து மேற்காக இருக்கும்படி அமைக்கவேண்டும்.

** இரண்டு கொட்டகைகளுக்கு இடையில் குறைந்தது இருபது  மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். குஞ்சுகள் வளரும் கொட்டகைகள், வளர்ந்த வான்கோழிகள் வளரும் கொட்டகைகளிலிருந்து குறைந்தது 50 முதல் 100 மீட்டர்இடைவெளியில் இருக்கவேண்டும்.

** திறந்தவெளிக் கொட்டகையின்  அகலம் ஒன்பது  மீட்டர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

** கொட்டகைகளின் உயரம் தரையிலிருந்து கூரைக்கு 2.6 மீட்டர் முதல் 3.3 மீட்டர் வரை இருக்கலாம்.

** கொட்டகையின் கூரை பக்கவாட்டுச் சுவரிலிருந்து குறைந்தது ஒரு மீட்டர்அளவிற்கு வெளியில் நீட்டியிருக்குமாறு அமைத்தால் மழைக்காலங்களில்மழைச்சாரல் கொட்டகைகளின் உள்ளே செல்வது தடுக்கப்படும்.

** கொட்டகையின் தரை விலை மலிவாகவும், தரமானதாகவும், பாதுகாப்பாகவும் அமைக்கப்பட வேண்டும். பொதுவாக ஈரத்தை உறிஞ்சாத கான்கிரீட் தரைகளே வான்கோழிக் கொட்டகைகளுக்கு ஏற்றவை.

** ஆழ்கூளமிடப்பட்ட தரைக்கொட்டகைகளில் வான்கோழிகளை வளர்க்கும் போது பொதுவாக முட்டைக் கோழிகளை பராமரிக்கும் முறைகளை கையாள வேண்டும். வான்கோழிகளுக்கு போதுமான தங்குமிட அளவு, தண்ணீர் மற்றும் தீவனத்தட்டிற்கு தகுந்த இடவசதி கிடைக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

நன்மைகள்

** வான்கோழிகளின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.

** நோய்த்தடுக்கும் முறைகளும் நல்ல மேலாண்மையும் சாத்தியம்.

click me!