குதிரைவாலி சாகுபடிக்கு ஏற்ற ரகங்களில் நீர் பாசனம் செய்வது எப்படி?

First Published Jul 26, 2017, 1:00 PM IST
Highlights
How to irrigate varieties suitable for kuthiraivali farming?


இரகங்கள்:

கோ 1, கோ(குதிரைவாலி)2 ஆகிய இரகங்கள் உள்ளன. 

ஏற்ற பருவம்:

மானாவாரியாக பயிரிட செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் ஏற்றது. பாசனப்பயிராக பயிரிட பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும். 

ஏற்ற மண்:

குதிரைவாலி தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுகையில் ஒரளவிற்கு வளரக்கூடியது. இது மணல் கலந்த களிமண் நிலங்களில் நன்கு வளரக்கூடியது. கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

நிலத்தை தயார்படுத்துதல்:

கோடையில் நிலத்தை 2 முறை கலப்பையை கொண்டு உழுது பக்குவப்படுத்தி கொள்ளவேண்டும்.

கடைசி உழவின் போது தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

பாசனபயிராக இருந்தால் தேவையான அளவில் பார்கள் அமைக்க வேண்டும்.

விதையளவு:

ஒரு எக்டருக்கு 8-10 கிலோ விதைகள் தேவைப்படும். 

விதைத்தல்:

விதைகளை தெளித்தல் (அ) தயார் செய்துள்ள பாரில் 3-4 செ.மீ துளையிட்டு விதைக்கலாம். விதைக்கும் போது வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீ விட வேண்டும்

நீர் நிர்வாகம்:

பொதுவாக குதிரைவாலிக்கு நீர்பாசனம் தேவையில்லை. வறண்ட சூழ்நிலை நிலவினால் பூங்கொத்து வரும் தருணத்தில் ஒருமுறை நீர்பாசனம் அளிக்கவேண்டும்.

அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்றவேண்டும்.

click me!