** வளரும் கோழிகளின் கொட்டகையில் கோழிகளை விடுவதற்கு முன்னால் அக்கொட்டகையினை நன்றாக சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
** கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அவற்றிற்கு இட வசதி, தீவனம் மற்றும் தண்ணீர்த் தட்டுகளும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
** ஆழ்கூளக் கொட்டகைகளில் ஆழ்கூளத்தை 4 இஞ்ச் உயரத்திற்குப் பரப்பி விட வேண்டும்.
** தீவன மற்றும் தண்ணீர்த் தொட்டிகளை கொட்டகையில் அமைக்க வேண்டும்.
** கோழிகளின் தேவைக்கேற்றவாறு தண்ணீர் மற்றும் தீவனத்தட்டுகளை மாற்ற வேண்டும்.
** கோழிகளின் வளரும் பருவத்தில் வரையறுக்கப்பட தீவன மேலாண்மை முறையினைப் பின்பற்றுவதால் கோழிகளின் வளரும் பருவத்தில் அவை அளவிற்கு அதிகமான உடல் எடையினை அடைவதையும், விரைவில் இனப்பெருக்க முதிர்ச்சியையும் தடுத்து அதிக முட்டை உற்பத்தியைப் பெறலாம்.
** ஆழ்கூளத்தை முறையாக மேலாண்மை செய்வதால் இரத்தக்கழிச்சல் போன்ற நோய்கள் கோழிகளுக்கு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
** திறந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகைகளில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வெளிச்சம் இருந்தாலே போதுமானது. செயற்கை வெளிச்சம் தேவையில்லை.
** கொட்டகையில் ஒரே மாதிரியாக கோழிகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை கோழிகளின் எடையினைப் பரிசோதித்து கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்களின் ஆலோசனைப் படி உடல் எடை அதிகரிக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
** பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி, மருந்துகள் அளித்தல் மற்றும் இதர மேலாண்மை முறைகளான குடற்புழு நீக்கம் செய்தல், அலகு வெட்டுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்.