நெல்லில் தழைச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
1.. பயிர்கள் வளர்ச்சி குன்றி இருக்கும்
2.. அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்
3.. வயல்வெளி முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக காட்சியளிக்கும்
4.. தூர்கட்டுதல் குறைந்து காணப்படும்
5.. கதிரில் மணி பிடித்தல் குறைந்து விடும்
நிவர்த்தி செய்யும் முறை:
** எக்டருக்கு 330 கிலோ யூரியாவை பிரித்து மூன்று முறை(110 கிலோ/ ஏக்கர்) என்ற அளவில் மண்ணில் இடவேண்டும்.
** 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து 10 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும்.
நெல்லில் மணிச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
1.. பயிர்கள் வளர்ச்சி குன்றியிருக்கும்
2.. தூர்கட்டுதல் குறைந்துவிடும்
3.. இலைகள் கரும்பச்சை நிறமாக மாறி நெட்டுக்குத்தாக இருக்கும்
4.. மணிப்பிடித்தல் குன்றிவிடும்
நிவர்த்தி செய்யும் முறை:
** ஆறு கிலோ சூப்பர் பாஸ்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து. மறுநாள் நன்கு கலக்கி, பின் காலையில் மேலாக வடித்து பயிர்கள்மீது 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவேண்டும்.