உணவுப் பொதியல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இதோ அதன் செயல்பாடுகள் மற்றும் பிரிவுகள்…

Asianet News Tamil  
Published : May 09, 2017, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
உணவுப் பொதியல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இதோ அதன் செயல்பாடுகள் மற்றும் பிரிவுகள்…

சுருக்கம்

Have you heard about food packages? Here are its functions and categories ...

உணவுப் பொதியல்

போக்குவரத்து மற்றும் உணவு விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையே உணவுப் பொதியல்.

உணவுப் பொதியியலின் முதன்மையான பங்கு புறச்சூழல் மற்றும் உராய்வு சேதத்திலிருந்து உணவைப் பாதுகாப்பதும், உணவில் சேர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய நுகர்வோருக்கு தகவல்களை வழங்குவதாகும்.

சர்வதேச வர்த்தகம் விரிவடையும் போது உள்நாட்டு பொதியல் முறையை மேம்படுத்துவது இன்றியமையாததாகும்.

அளவு மற்றும் தரம் பிரிக்கப்பட்ட சிறந்த பொதியல் விற்பனையாளார்களுக்கும் நுகர்வோருக்கும் சந்தைபடுத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றது.

சிறந்த / மேம்படுத்தப்பட்ட பொதியலின் தன்மை கழிவுகளை குறைப்பதாக இருக்கவேண்டும்.

செயல்பாடுகள் மற்றும் பொதியலின் பிரிவுகள்

செயல்பாடுகள்

பொதியலின் முக்கியமான 3 செயல்பாடுகள் - பாதுகாப்பு, பதனிடுதல் மற்றும் விற்பனை மேம்படுத்துதல்/ஊக்குவிப்பு ஆகும்.

பாதுகாப்பு - இது காலநிலை மற்றும் எந்திரத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து பாதுகாத்தல். காலநிலை பாதுகாப்பு காற்று மண்டல ஈரப்பத்தம், ஆக்ஜிஸன், ஒளி, வெப்பம், குளிர் மற்றும் நுண்ணுயிரி வழியாக ஏற்படக்கூடியது.எந்திரத்தன்மையுடைய பாதிப்பு என்பது பொதியல், சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம், தாக்கவிளைவு, அதிர்வு மற்றும் அழுத்தத்தால் ஏற்படக்கூடியதாகும்.

பதனிடுதல் - உணவுப் பதனிடுதல்/ பாதுகாத்தல் என்பது குறிப்பிட்ட உணவு பொதியலில் எத்தனை காலத்திற்கு கெடாமல் பாதுகாக்க முடியும் என்பதாகும். உணவின் தரம் நுகரும் வரை அதன் தரம் கெடாமல் பாதுகாக்கவேண்டும்.

விற்பனை ஊக்குவிப்பு - சரியான பொதியல் சிறந்த விற்பனையாளராக செயல்பட்டு நுகர்வோரை ஈர்க்கின்றது. இதன் மூலம் விளம்பரஸ் செலவுகளும் கனிசமாக குறையும்

பொதியலின் பிரிவுகள்

ஒற்றைப்பொதியல்/தொகுதிபொதியல் : இது முதன்மை பொதியல் அல்லது நுகர்வோரை சென்றடையக் கூடிய பொதியலாகும். ஒவ்வொரு பொதியலில் வைக்ககூடிய அலகுகள் மற்றும் அளகுகள் தயாரிக்கப்பட்ட பொருளின் தன்மையையும் வர்த்த முறையையும் பொறுத்தது.

இடைநிலை பொதியல்: இது முதன்மை பொதியல் அல்லது நுகர்வோரை சென்றடையக் கூடிய பொதியலாகும். ஒவ்வொரு பொதியலில் வைக்ககூடிய அலகுகள் மற்றும் அளகுகள் தயாரிக்கப்பட்ட பொருளின் தன்மையையும் வர்த்த முறையையும் பொறுத்தது.

மொத்தப்பொதியல்:இது மூலப்பொதியல், விநியோகப்பொதியல் மற்றும் போக்குவரத்திற்கான பொதியல் என்றும் அழைக்கப்படும். இது தனி/ஒற்றை பொதியல் அல்லது இடைநிலை பொதியலுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. பொதுவாக இவ்வகை பொதியல் இயந்திர தன்மையுடைய பாதிப்பிலிருந்து காக்கப்படவேண்டும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!