வாத்து வளர்த்து லாபம் பார்க்க ஆசையா? அப்போ இந்த முறையை பயன்படுத்துங்க…

 |  First Published May 9, 2017, 1:00 PM IST
Do you want to grow ducks and earn a profit? Then use this method ...



வாத்து வளர்த்து லாபம் பார்க்க ஆசைப்படுவோர் கொட்டில் முறையில் வாத்து வளர்க்கலாம்.

தேவையான இடவசதி

Tap to resize

Latest Videos

3 வாரத்திற்கு 0.85 சதுர அடி, வாத்து ஒன்றிற்கு

48 வாரத்திற்கு 1.75 சதுர அடி / வாத்து ஒன்றிற்கு

920 வாரத்திற்கு 3.00 சதுர அடி / வாத்து ஒன்றிற்கு

20 வாரத்திற்கு மேல் 4.00 சதுர அடி / வாத்து ஒன்றிற்கு

தீவனம்

1.. இறைச்சி வாத்துகளுக்கு

இவ்வகை வாத்துகள் 7 வாரத்தில் குறைந்தபட்சம் 2.2 முதல் 2.5 கிலோ வரை வளரக்கூடியது. அப்போது அதனுடைய தீவன மாற்றுத்திறன் 3.25 ஆகும்.

2.. முட்டை வாத்துகளுக்கு

முதல் 20 வாரத்திற்கு வாத்துகளுக்கு 12.5 கிலோ தீவனம் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 120 முதல் 170 கிராம் தீவனம் என்ற கணக்கில் ஒராண்டிற்கு தோராயமாக 60 கிலோ வரை தீவனம் தேவைப்படும்.

3.. மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு

அறுவடை செய்த நிலங்களில் உள்ள உதிரி தானியங்கள் புழு, பூச்சிகள், நத்தைகளை உண்டு வாழ்கின்றன.

இவ்வகையான தீவனம் அதிக முட்டையிடுவதற்கு போதுமானது அல்ல. ஆகவே மேய்ச்சலில் விடுவதற்கு முன்பாகவும் மேய்ச்சலில் இருந்து வந்த பின்பும் கூடுதலாக நெல் போன்ற தானியங்களையோ அல்லது வாத்துகளுக்கென்றே தயாரிக்கப்பட்ட தீவனங்களையோ நாம் கொடுக்கலாம்.

ஒரு சில விவசாயிகள் குச்சி தீவனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த வகையான தீவனங்கள் ஒரு நாளைக்கு 50 கிராம் முதல் அதிகமாக 100 கிராம் வரை கொடுக்கலாம். அப்படி கொடுக்கப்படும்பொழுது தொடர்ச்சியாக முட்டையிடுவதற்கு போதிய ஊட்டச்சத்துகள் தீவனத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்றன.

click me!