பன்றி வளர்ப்பு தொழிலை யாரெல்லாம் செய்யலாம்? அதனால் கிடைக்கும் நன்மைகள் ஒரு அலசல்…

 |  First Published May 9, 2017, 12:55 PM IST
Who can do pig farming? So the advantages of getting a parcel ...



பன்றி வளர்ப்புத் தொழில் யாருக்கு ஏற்றது?

1.. சிறிய மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு ஏற்றது.

Tap to resize

Latest Videos

2.. விவசாயத்தை தொழிலாக செய்யும் படித்த இளைஞர்களுக்கு ஒரு பகுதி நேரத் தொழிலாக செய்ய ஏற்றது.

3.. படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏற்றது.

4.. மகளிர் பண்ணை வைத்து தொழில் செய்ய ஏற்றது.

பன்றி இனங்கள்

நம் நாட்டில் நாட்டுப்பன்றிகளே வெகுகாலமாக வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் உடல் எடை மிகவும் குறைவு. எனவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இனங்கள் நம் நாட்டு இனங்களை மேம்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் வளர்க்கப்படும் அயல்நாட்டுப் பன்றி இனங்கள்,

1.. லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர்

இந்தியாவில் அதிக அளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு பன்றியினம். வெள்ளை நிறம் அல்லது சில நேரங்களில் கருப்பு நிற புள்ளிகள் காணப்படும். விரைத்த காது மடல்கள், தட்டு போன்ற முகம் மற்றும் சராசரியான நீளமுடைய மூக்கு.

நாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்கு ஏற்ற இனம். அதிக குட்டிகளை ஈனும் திறன்

வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 300-400 கிலோ. வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 230-320 கிலோ

2.. லேண்ட்ரேஸ்

வெள்ளையான உடலில் கருப்பு நிறப்புள்ளிகள். நீண்ட உடல் மற்றும் தொங்கிய காதுகள். அதிக குட்டிகள் ஈனும் திறன். இறைச்சி லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர் இனத்தின் இறைச்சி போன்றே இருக்கும். நாட்டுப்பன்றிகளுடன் கலப்பினம் செய்வதற்கு ஏற்ற இனம்.

வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 270-360 கிலோ. வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 200-320 கிலோ

3.. மிடில் வொய்ட் யார்க்ஷயர்

இந்தியாவின் சில பாகங்களில் நாட்டுப்பன்றிகளை கலப்பினம் செய்வதற்காக உபயோகிக்கப்படுகிறது. மிக வேகமாக வளரும் திறன். இதன் குட்டி ஈனும் திறன் லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர் விட குறைவு.

வளர்ந்த ஆண் பன்றியின் உடல் எடை- 250-340 கிலோ. வளர்ந்த பெண் பன்றியின் உடல் எடை- 180-270 கிலோ

பன்றி வளர்ப்பின் நன்மைகள்

** பன்றிகள் வேகமாக வளரும் தன்மையுடையன. அவை நல்ல பராமரிப்பில் ஒரே சமயத்தில் ஒன்று முதல் பன்னிரெண்டு குட்டிகளை ஈனக்கூடியவை

** பன்றிகள் மனிதனால் உட்கொள்ள முடியாத உணவுப்பொருட்களான பசுந்தீவனம், தானியங்களின் உப பொருட்கள், இறைச்சி கழிவுகள், சமையலறைக்கழிவுகள் ஆகியவற்றை நல்ல புரதச்சத்து மிக்க இறைச்சியாக மாற்றுகின்றன

** பன்றிகளை இறைச்சிக்காக வெட்டும்போது சராசரியாக அவற்றின் உயிர் எடையில் 60-80 சதவிகித இறைச்சி கிடைக்கும்

** பன்றிகளின் சாணம் மண்ணின் தன்மையினைப் பாதுகாக்கும் உரமாக பயன்படுகிறது

 

click me!