விவசாய முறைகளில் மிகவும் பழமை வாய்ந்ததும் சிறந்தது என்று கருதப்படுவது மண்புழு விவசாய மட்டுமே.
undefined
மண்புழுக்கள் மண்ணில் உள்ள மக்குகளை அவ்வப்போது உண்டுவிட்டு மேலே சீதோஷன நிலை சரி இல்லாத போது மண்ணுள் தனக்கு ஏற்ற சூழ்நிலை உள்ள இடம் சென்று விடும். அப்படி போகும் பட்சத்தில் மண்ணை உழவு செய்து கொண்டே செல்லும் விளைவு மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். அதனால் பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும்.
உள்ளே சென்றுவிட்டு மீண்டும் தனக்கு உணவு தேவை படும்போதும் நல்ல ஈர பதம் மண்ணில் இருக்கும் போதும் மேலே வரும். மக்குகளை மண்ணுடன் கலந்து உண்டு அதன் எச்சங்களை வெளியிடும்போது மக்குகள் மண்ணுடன் கலக்கும். புழுக்களின் ஜீரண மண்டலத்தில் சுரக்கும் ஒரு வித திரவத்துடன் கலப்பதனால் அதன் எச்சமிடும்.
இதுதான் இந்த மண்ணுலகில் இன்று வரை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு சிறந்த பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய ஒன்றாக கருதபடுகிறது. அதனால் விவசாயி பயிர் செய்வதில் வெற்றி கண்டான்.
விவசாய செய்யும் செலவுகள் என்பதே இல்லை. பயிரில் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மற்றவற்றை அப்படியே விட்டு அடுத்த பயிரினை சுழற்சி முறையில் செய்த காரணத்தால் மண்ணில் மக்குகள் அதிகமாக இருக்கும்.
மண்புழுக்களுக்கு உணவாக விளங்கியதாக மண்புழுக்கள் எண்ணிக்கை அதிகமாகி மண்ணில் மேலும் கீழும் சென்று வர நல்ல உழவு செய்யப்பட்டும்.
பயிர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்களும் கிடைக்க பெற்று நல்ல விளைச்சல் இருந்தது. இதுவே உலகில் முதன் முறையாக தோன்றிய உழவு முறை. இதற்க்கு அடக்கமே மற்ற உழவு முறைகள்.