மா மரங்களில் பூக்களை பராமரிப்பு எப்படி ஒரு அலசல்…

 |  First Published May 6, 2017, 12:39 PM IST
How to protect flowers in mango



 

மா மரங்களில் பூக்கள் பராமரிப்பு

Tap to resize

Latest Videos

1.. மா மரங்களில் பூக்களை பூக்க வைப்பதற்கு மற்றும் அவற்றை உதிர்ந்து போகாமல் காப்பது சற்று கடினமான காரியம்.  சாதாரணமாக மா மரங்கள் நவம்பர் கடைசி முதல் ஜனவரி இறுதி வரை பூக்கின்றன.

2.. முதலில் பூக்க ஆரம்பிப்பது செந்தூரா ரகம் கடைசியில் பூப்பது நீலம் ரகம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் செந்தூரா அடுத்து ,இமாம் பசந்த்,ரஸால்,அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா ஆகியவை பூக்கும்.

3.. மாம்பூக்களில் இயற்கையாகவே உதிராமல் இருந்தால் 1% தான் நிற்கும், பிரச்சினை இருந்தால் அதற்கும் குறைவான பூக்கள் மட்டுமே பிஞ்சுகளாகும் . நமக்கு மகசூலும் குறையும்.

4.. அல்போன்சா, இமாம்பசந்த்,பங்கனபள்ளி போன்ற ரகங்களில் 1% விட குறைவாகத்தான் பிஞ்சுகளாகும்

5. இரண்டாவது இயற்கையாகவே மரங்கள் பழங்களை தாங்கும் அளவுக்கு தான் காய்கள் நிற்கும். மாம் பூக்களை அதிகம் தாக்குவது தத்துப்பூச்சிகள் மற்றும் சூட்டிமோல்ட் என்ற சாம்பல் நோய்.

6.. கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் கலந்து தெளிப்பதால் அளவுக்கு அதிகமான பூக்கள் உருவாகும், அரப்பு மோர் கரைசல் மற்றும் தேங்காய் பால் மோர் கரைசல் மாம்பூக்களின் மேல் தெளித்தால் அதிக பூக்கள்  பிஞ்சுகளாகும்.

7.. பூக்கள் ஆரம்பித்த பிறகு மரங்களின் வேரில் மேம்படுத்தப்பட ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் தண்ணீரில் கலந்து விடுவதால் பழங்களின் அளவு மற்றும் சுவை அதிகமாக இருக்கும்

8.. மாமரங்கள் பூ எடுத்து கோலி அளவு வந்த பின்புதான் தண்ணீர் பாய்சவேண்டும்

click me!