எதிர்காலத்தில் விவசாயம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

 |  First Published May 6, 2017, 12:18 PM IST
Future agriculture



 

** பள்ளிகளில் விவசாயம் பற்றிய ஒரு பாட திட்டம் உருவாகும். (தமிழ், ஆங்கிலம், கணிதம், பௌதீகம், இரசாயணம், உயிரியல், விவசாயம் என மாறும்)

Tap to resize

Latest Videos

** ஊர்தோறும் இயற்கை உழவு ஆய்வுக்கூடங்கள். அதில் படிக்க கட்டாய நுழைவுத் தேர்வுகளை அரசு நடத்த வேண்டும்.

** உயிர்நாடி முன்னோடி உழவர் நிலங்களில் உலக நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து பயிற்சி பெற போட்டியிருக்கும்.

** சந்தைதோறும் புதுமை உழவுக்கருவிகள், இயற்கை இடுபொருள் அங்காடிகளே நிறைந்திருக்கும்.

** நீரிருக்கும் இடங்களெல்லாம் நிலமிருக்கும். அங்கே கட்டிடடங்கள், தொழிற்சாலைகள் கட்ட சட்டத்தில் தடையிருக்கும். நீரில்லா இடங்களில் மட்டும் கட்டிடங்கள் எழுப்ப அனுமதி கிடைக்கும்.

** திருமண வலைதளங்களில் உழவுத் தொழில் செய்யும் இளைஞர்கள் பதிவு செய்ததும் அவருக்கு பெரும் போட்டியிருக்கும்.

** ஊர்தோறும் உழவர் கூட்டுறவு அமைப்புகள் – உற்பத்தி பொருட்கள் அரசு உயர்ந்தவிலையில் நேரடி கொள்முதல் – உடன் மக்களுக்கு விநியோகித்தல்; என்பதற்கு ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் இருக்கும்.

** உரங்களின் பெயர்கள், ஜிஎம்ஓ விதைகள், அருங்காட்சியங்களில் உயிர் ஆயுதங்களின் பட்டியலில் பாதுகாப்பாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

** வீட்டில் ஒவ்வொருவரும் பகுதி நேர உழவர்களாய் இருப்பது இந்தியக் குடிமகனின் கடமைகளுள் ஒன்றென சட்டம் எழுதப்பட்டிருக்கும். 

 ** கிராமம் நோக்கி ஒரு மறு குடியேற்றம் வரலாம். இதன் மூலம் கிராமங்கள் பொருளாதாரத்தில் விவசாயத்தோடு இணைந்த வணிகம் மூலமும் மீள் குடியேற்ற மக்களினால் கராம வாழ்க்கை தரமும் உயரும்.

** இனி முழு நேர விவசாயி என்றல்லாது, 4-5 நாள் ஒரு பணி & 3-2 நாள் விவசாய பணி என்று மாறும்.

** இனி விளை நிலங்களை விற்கப்படுவதை இளைஞர்களே தடுப்பர்.

** மாடித்தோட்டம் அரசு உதவி இல்லாமலே அனைத்து வீடுகளிலும் உருவாகும்.

** விவசாய விளைபொருட்களுக்கு விலை நிரணயம் செய்வதில் விவசாயியின் கைகள் ஓங்கி நிற்கும்.

இப்படியெல்லாம் விவசாயம் இருந்தால் நல்லாதானே இருக்கும்.

click me!