பனையில் இருந்து உருவாகும் பொருட்களை பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத தகவல்கள்…

 |  First Published May 9, 2017, 1:18 PM IST
The information you have not yet learned about from the bag



1.. பனை உலகின் பூக்கும் தாவரங்களில் பழமையானதாக கருதப்படுகிறது.

2.. பல நூற்றாண்டுகளாக பல வகையான பனைகளிலிருந்து இனிப்பு கள், புளிக்க வைத்த பானங்கள், பனப்பாகு, பனை வெல்லம் பனையிலிருந்து பெறப்படுகிறது.

Latest Videos

undefined

3.. உலகின் முதல் சர்க்கரை ஆதாரமாக அரங்கா பினாட்டா எனும் பனைவகை விளங்குகிறது.

4.. கி.மி 4-ஆம் நூற்றாண்டில் பொராசஸ் ஃபிலாபெலிபர் பனை வெல்லத்தை பற்றி மன்னர் சந்திர குப்தரின் கிரேக்க தூதுவர் மற்றும் வரலாற்று வல்லுவரான மெகஸ்தனிஸ் குறிப்பு வரைந்துள்ளார்.

5.. இலங்கையில் காரியோடா யுரன்ஸ் சாற்றிலிருந்து பிரிதெடுக்கப்படும் வெல்லம் மற்றும் பாகு பழங்காலத்திலிருந்து முக்கிய சர்க்கரை ஆதாரமாக உள்ளது.

6.. ஆப்பிரிக்காவில் பனைச்சாறு பாரம்பரிய மது உற்பத்திக்கு பயன்படுகிறது.

7.. பெரும்பாலான பனை வகைகள் பனைசாறுக்கு மட்டுமல்லாது பழங்கள், கட்டுமானப் பொருட்கள், எரிபொருள், இழைகள், மெழுகு போன்று பலவகைகளில் பயன்படுகிறது.

8.. கிராமபுற மக்களுக்கு சமூக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக பனை விளங்குகிறது.

9. காந்தி பொராசஸ் ஃபிலாபெலிபர் வகை பனையை வறுமையை போக்கும் வகையான மூலதனமாக கருதினார்.

10. தமிழ் நாட்டில் அருணாச்சலம் அவர்களால் இயற்றப்பட்ட தமிழ் பாரம்பரிய கவிதை தொகுப்பான தலா விலாசம் பனையின் மகிமைக்காக அர்ப்பணிக்கப்பட்டு பனையின் பல்வேறு பகுதிகளிலிருந்து தயாரிக்கப்படும் 801 வகையான பனைப்பொருட்களை பட்டியலிடுகிறது.

11. குடிசை தொழிலுக்கு ஏற்றதாக பனையை இயற்கை படைத்திருக்கிறது. பனை மரங்கள் இருக்குமிடத்தில் பனை வெல்லம் எளிதாக பெறலாம்.

12. இந்தியாவில் தமிழ்நாடு பனைப்பொருட்களின் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக விளங்குகிறது. நம் நாட்டில் உள்ள 8.59 கோடி பனை மரங்களில் தமிழ் நாட்டில் சுமார் 5.10 கோடி மரங்கள் உள்ளன.

13. பனை பொருட்கள் ஏற்றுமதி மூலம் அந்நிய செலவானி ஈட்ட தமிழ் நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது.

14. தாகம் தனிப்பதற்கு மட்டுமல்லாது உடல் நலத்திற்கும் பனை நொங்கு சிறந்தது. பதப்படுத்தப்பட்ட நொங்கு சிறந்த மதிப்புக்கூட்டு பொருளாக முன்னிருத்தப்படுகிறது.

15. பதனி, பனை வெல்லம், பனை சர்க்கரை, மிட்டாய், பதப்படுத்தப்பட்ட நொங்கு, பழக்கூழ் மற்றும் பனை சாக்லேட் சந்தையில் கிடைக்கிறது.

click me!