பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டு நாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, லேயர், பிராய்லர் தீவனத்தைக் கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளக்குறப்போ பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும் வித்தியாசமே இல்லாமப் போயிடும்.
கம்பெனித் தீவனங்களில் வளர்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி விடுறதுக்காக சில வேதிப் பொருட்கள கலக்குறாங்க. அதனால பல பிரச்னைகள் வருதுன்றது எல்லோருக்குமே தெரியும்.
கம்பெனித் தீவனத்தைச் சாப்பிடுற எந்தக் கோழியா இருந்தாலும், அதுங்களுக்கு ரசாயன பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அந்தக்கோழி கறியைச் சாப்பிடற மனிதர்களுக்கும் பாதிப்புகள் வரத்தான் செய்யும்.
அதில்லாம நாட்டுக் கோழிகளுக்கு நோய்த் தாக்குதல் இருக்காதுங்கிறது சரிதான். ஆனா, மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற கோழிகளுக்குத்தான் நோய் வராது.மொத்தமா அடைச்சு வெச்சா, கண்டிப்பா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும்.
அப்புறம் அதுக்கான மருந்து, ஊசினுபோடறப்ப... பழையபடி பிராய்லர் கோழி கணக்காத்தான் இருக்கும். இயற்கைச் சூழல்ல மேயவிட்டு வளர்த்தாதான் அதுமுழுமையான நாட்டுக் கோழி. மண்ணைக் கிளறி, கரையான், புழு பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டு வளர்ற கோழிகளுக்குத்தான் இயற்கையான சுவை இருக்கும்.
தோட்டங்கள்ல விவசாயத்தோட உபத் தொழிலா நாட்டுக் கோழிவளர்ப்பையும் விவசாயிகள் செய்தால் போதுமான அளவுக்கு நாட்டுக் கோழிங்க கிடைக்க ஆரம்பிச்சுடும். கிராமங்கள்ல வீட்டுக்கு வீடு வளர்க்கலாம்.
புறக்கடை முறையில வீட்டுக்குவீடு நாட்டுக் கோழிங்க வளர்க்குறதை எங்க துறை மூலமாக ஊக்கப்படுத்திக்கிட்டு இருக்கோம். கொஞ்சம் பெரிய அளவுல வளர்க்கணும்னு நினைக்கறவங்க, தனித்தனியா 75 சதுரடிஇருக்குற கொட்டகைகள்ல, 10 பெட்டைக்கு 2 சேவல்ங்கிற விகிதத்துல வெச்சு நாமளே தீவனத்தைத் தயார் பண்ணிக்கொடுத்து வளக்கலாம்.
அந்தக் கோழிகள் மேயுறதுக்காக வலை அடிச்சு கொஞ்ச இடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாம். அப்பதான் தரமான நாட்டுக் கோழிகளை உருவாக்க முடியும். இந்த முறையில அடை வெச்சே வருஷத்துக்கு எண்ணூறுகுஞ்சுகளை உற்பத்தி பண்ண முடியும்.