இந்த முறைப்படி தேர்வு செய்த நாட்டுக் கோழிகளை வளர்த்தால் நல்ல லாபம் பார்க்கலாம்...

 |  First Published Mar 14, 2018, 1:41 PM IST
You can see the best way to grow the countrys selected chickens.



** நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும்.

** வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல்,சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். 

** பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில் பிரியமுள்ளவைகளாய் இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும்.

** கோழியின் சுகத்தை கொண்டையில் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக் குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். 

** நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய பிரம்மாரகக் கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத் தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும். 

** தீவனத் தொட்டியில் போதுமான இடவசதி, கோழிகளுக்குக் கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும். 

** தீவனத் தொட்டியின் மேற்புற விளிம்பு, கோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்பதீவனத் தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும். 

** சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாது. 

** தீவனமூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ளமரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்
 

click me!