விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் கூடுதல் மகசூலும், அதிக லாபமும் பெறலாம்.
பயறு வகைகளுக்குப் பிறகு:
பயறு வகைகள் பயிரிடும் விவசாயிகள் அதன் பிறகு பயறு அல்லாது வேறு பயிர்களை தேர்வு செய்ய வேண்டும் கோதுமை, மக்காச் சோளம், முதலில் செய்த பயிர் அல்லது தானியங்களை ஊடுபயிராக பயிரிடலாம்.
சில வகைப் பயிர்கள் மண்ணில் உள்ள சத்துகள் அனைத்தையும் உறஞ்சிவிடும் தன்மை கொண்டவை. எள், கடலை ஆகியவை இத்தகையத் தன்மை கொண்டவை. எனவே, இத்தகையப் பயிர்களைப் பயிரிட்ட பிறகு பயறு வகைகளைப் பயிரிட்டால் சத்துக்களை மண்ணில் நிலை நிறுத்தும்.
தானியப் பயிர்களுக்குப் பிறகு:
மானாவாரியாகவோ, இறவைப் பயிராகவோ தானியங்களை பயிரிடும் விவசாயிகள், தானிய விளைச்சலுக்குப் பிறகு பசுந்தாள் உரத் தாவரங்களைப் பயிரிடலாம். சனப்பை, நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயறு, மக்காச்சோளம் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம்.
நல்ல அதிக ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களுக்குப் பிறகு குறைந்த ஊட்டச்சத்து தேவையுடைய பயிர்களைப் பயிரிட வேண்டியது அவசியம். மக்காச் சோளம், உளுந்து, பூசணி வகைகளை சாகுபடி செய்யலாம்.
மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு:
மறுதாம்புப் பயிர்களுக்குப் பிறகு ஆழமான வேர்கள் செல்லக் கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம்.
உருளைக் கிழங்கு, மஞ்சள், பீட்ரூட், கேரட், நெல், வெங்காயம், காய்கறி என சுழற்சி முறையை கடைப்பிடிக்கலாம்.
கோடை உழவுக்குப் பிறகு:
அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை, கோடை உழவு முடிந்த பின்னர் சாகுபடி செய்வது அவசியம். சற்று இறுகிய மண்ணிலும் வளரக் கூடிய தாவரங்களைப் பயிரிடலாம்.
உருளைக் கிழங்கு, முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கரும்பு, உளுந்து, பசுந்தாள் உரம்
என சுழற்சி முறையில் வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.