விவசாயிகள் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்க மஞ்சள் சாமந்தியை பயிர் செய்யலாம்…

 |  First Published Aug 8, 2017, 12:47 PM IST
Farmers can cultivate yellow salad to make them more profitable ...



தற்போது மஞ்சள் சாமந்தி மலர் பயிர்களில் கூடுதலாக லாபம் சம்பாதித்து கொடுப்பவை, நஷ்டம் வராத மலர் சாமந்தி.

இதில் பல ரகங்கள் உள்ளன. கோ1 எம்.டி.,யூ 1,2 ஆகியவை மஞ்சள் நிற பூக்களை கொடுக்கும். கோ.2 கரும்பழுப்பு நிறத்தில் பூக்களை கொடுக்கும். சந்தைக்கு ஏற்றப்படி இவைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

Latest Videos

undefined

இதில் பல வண்ணங்கள் இருப்பினும். மஞ்சள் மற்றும் வெள்ளை ரகங்கள் பிரபலமானவை. கோவை வேளாண் மையத்தில் சில ரகங்கள் வெளியீடு செய்துள்ளனர். இந்த ரகங்கள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வடிகால் வசதியுடன் மணல் கலந்த செம்மண் நிலம் ஏற்றதல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை சுமார் 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும். நீர்த் தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமாக களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பயிருக்கு ஏற்றவை.

சாமந்தி ஒரு வெப்ப,மிதவெப்ப மண்டலப் பயிராகும். செடிகள் நீண்ட இரவு, குறுகிய பகல் கொண்ட பருவங்களில் பூக்கும். நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்திய பிறகு கடைசி உழவின்போது அடி உரமாக தொழுஉரம் ஏக்கருக்கு 10 முதல் 15 டன் இடலாம்.

விதை மூலம் பயிரிடுவதை விட நாற்று மூலம் அதிகம் நடவு செய்யப்படுகிறது. நடவு செய்யும்பொழுது, இடைவெளி 1.5 ×1.5 அடி என்ற அளவில் பார் பிடித்து நடலாம். ஒவ்வொரு செடிக்கும் இடையில் 1 முதல் 1.5 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். 

நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறு வேர்ப்பாகம் அனைத்தும் மறையும்படி நடுதல் வேண்டும். ஆடி மற்றும் தை பட்டங்கள் சாமந்தி நடவு செய்ய சிறப்பான பட்டங்கள் ஆகும். பருவம் தவறி நடும்போது செடிகளில் பூக்கும் திறன் மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும்.

இயற்கை கரைசல்கள் தொடர்ந்து அளிப்பதன் மூலமும், உயிர் உரங்கள் மாதம் ஒரு தடவை தொடர்ந்து அளிப்பதன் மூலமும் அதிக எடை மற்றும் கவர்ச்சியான பூக்கள் கிடைக்கும். இயற்கை கரைசல்கள் தெளிப்பதால் அதிக நேரம் வாடாமல் இருக்கும் மலர்களை அறுவடை செய்யலாம்.

சாமந்தியை சாறு உறிஞ்சும் பூச்சிகள் (இலைப்பேன், அசுவினி இலைப்புழு) அதிகம் தாக்கும். கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றை தெளிப்பதன் மூலம் இந்த பூச்சிகளை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.

மீன் அமிலம் மண்ணில் ஏக்கருக்கு ஐந்து லிட்டர் வரை தொழுஉரத்தில் கலந்து இடலாம். இதனால் வாடல் நோயிலிருந்து காக்கலாம். களைகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சாமந்தி நட்ட ஆறாம் மாதம் முதல் பூக்கள் தோன்றும். சாமந்தி நட்ட ஆறாம் மாதம் முதல் பூக்கள் தோன்றும். நடவுப் பயிர் பூத்து ஓய்ந்தவுடன் செடிகளைத் தரைமட்டத்திலிருந்து வெட்டி விட்டு, களை எடுத்து, நடவுப் பயிருக்குப் பரிந்துரை செய்த அதே அளவு உரத்தினை இட்டு நீர் பாய்ச்சவேண்டும். மறுதாம்பு விடும் போது மூன்றாவது மாதம் முதல் பூக்கள் பூக்கும்.

கண்டிப்பாக சாமந்திக்கு தண்ணீர் தேங்க கூடாது. மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

click me!