சந்தையில் நிலையான விலை உடைய வாசமில்லா மலர் கனகாம்பரம். இதில் பல ரகங்கள் இருந்தாலும் சிகப்பு வண்ணத்தில் உள்ள மலர்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது.
1. நாற்று மேட்டுபாத்திகளில் விடப்பட்டு முப்பது நாட்களுக்கு பிறகு நடவு செய்யப்படுகிறது. இதற்கான இடைவெளி செடிக்கு செடி 1.5 அடி, வரிசைக்கு வரிசை இரண்டு அடி இருக்குமாறு செடிகளை நாடா வேண்டும். பார்களில் நடவு செய்தல் வேண்டும்.
2. தண்ணீர் தேங்காத நிலங்களில் மட்டுமே பயிரிட வேண்டும். பாத்திகளில் ஒரு நாள் தண்ணீர் தேங்கினால் கூட மூன்றாவது நாளே வேர் அழுகல் நோய் தாக்கி அனைத்தும் இறந்து விடும். வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
3. ககாம்பரத்திற்கு மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல், உயிர் உரங்கள், மீன் அமிலம் இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது அழகிய வண்ண மலர்கள் கிடைக்கும். தொடர்ந்து ஒரு வருடம் வரை பூக்கள் பூக்கும், அதிக மகசூல் கிடைக்கும்.
4. கற்பூரகரைசல் தொடர்ந்து தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் வராது. கனகாம்பரத்தில் சில நேரங்களில் நூற்புழு தாக்குதல் அதிகம் இருக்கும், அப்போது கற்பூரகரைசல் வேரில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அதனுடன் சிறிது கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் கலந்து விடவேண்டும்.
5. கனகாம்பரத்திற்கு களை கட்டுபாட்டு மிகவும் முக்கியமான ஒன்று. களைகளை அவ்வப்போது அகற்றி விட வேண்டும். அடுத்து பூ பூத்து முடிந்த கதிர்களை கிள்ளி எறிந்து விட வேண்டும். அப்போது தான் புதிய துளிர் உருவாகி புதிய பூக்கள் உருவாகும்
6. கனகாம்பர செடி நட்ட முப்பதாவது நாள் முதல் பூக்கள் தோன்றும். ஒருநாள் விட்டு ஒருநாள் பூக்கள் பறிக்க வேண்டும்.
7.. கனகாம்பரத்திற்கு என்றுமே சந்தையில் நிலையான விலை உண்டு.