பெட்டை ஆடுகளை எப்படி தேர்ந்தெடுக்கணும்? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

 
Published : Nov 18, 2017, 01:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
பெட்டை ஆடுகளை எப்படி தேர்ந்தெடுக்கணும்? இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க...

சுருக்கம்

How to choose a goat? You can read this ...

ஆடுகள் ஆரோக்கியமாக வளர அவைகளுக்குப் பயிற்சி அவசியம். கொட்டிலில் அடைத்து அல்லது கட்டி வளர்க்கப்படும் ஆடுகள் ஒரு நாளைக்கு 3-4 மணி நேரமாவது திறந்த வெளியில் திரிய அனுமதிக்க வேண்டும்.

திறந்த வெளி எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவு பயிற்சிக்கு ஏற்றது. பனித்துளி இருக்கும் போதும், சூரியன் மறைந்து இரண்டு மணி நேரத்திற்குப் பின்பும் மேய விடுதல் கூடாது. ஈரமான புற்களில் மேயும் போது குடல் அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு.

நகங்களை வெட்டுதல்

ஆடுகளின் சிறந்த பராமரிப்பிற்கு நகங்களை நன்கு வெட்டுதல் வேண்டும்.

இல்லையெனில் நகம் பெரிதாக வளர்ந்து, காலை பலகீனப்படுத்தும்.

30 நாட்கள் இடைவெளியில் கூரிய கத்தி, அல்லது கத்தரிக்கோல் வைத்து நறுக்கி விடுதல் வேண்டும்.

பெட்டை ஆடுகளை தெரிவு செய்தல்

நல்ல இலாபம் தரக்கூடிய மந்தையில் இனப்பெருக்கத்திற்கு பெட்டையத் தேர்வு செய்தல் அவசியம்.

பெட்டை ஆடுகளின் நல்ல பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு அவை நல்ல உடல் அமைப்பு பெற்றிருக்கவேண்டும்.

உடல் நல்ல வளர்ச்சியுடன் தோற்றத்திற்கு ஆரோக்கியமானதாகவும் நான்கு கால்களையும் நன்கு ஊனி நிற்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

பக்கவாட்டில் உடல் நீள முக்கோண வடிவமாகவும் கால்கள் வளையாமல் நேராகவும் தோள் கூர்மையாகவும் இருத்தல் வேண்டும்.

இடுப்புக்குழி எந்தளவு குழிந்துள்ளதோ அந்தளவுக்கு தீவனம் அதிகமாக உட்கொள்ளும். உடல் எடைக்குத் தகுந்தவாறு, மடி அதிகம் தொங்காமல் அடிவயிற்றின் பின்பகுதியில் நன்கு உலகம் இணைந்திருக்கவேண்டும்.

ஆட்டின் தோல் நன்கு தளர்ச்சியாக, வழவழப்பாக, மிருதுவாக இருக்கவேண்டும். சில இனங்களில் நல்ல பால் உற்பத்தி செய்யும் மாடுகளில் சதைப்பற்று குறைவாக இருக்கும்.

கழுத்து மெலிந்து தலையுடன் நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். கண்கள் தெளிவாக பளிச்சென்று இருக்கவேண்டும்.

பெட்டை ஆடுகள் சாதுவாகவும் பெண்மைத் தோற்றத்துடனும், இருக்க வேண்டும். மடி சதைப்பற்றின்றி மென்மையாக நல்ல வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருத்தல் வேண்டும்.

காம்புகள் முன்னோக்கி சற்று கூர்மையானதாகவும் இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!