ஆடுகளின் வயதைக் கண்டறிதல்
பொதுவாகப் பல் வரிசையைக் கொண்டு ஆடுகளின் வயதை நிர்ணயம் செய்யலாம். பற்களில் தற்காலிகப்பற்கள், நிரந்தரப் பற்கள், பால் பற்கள் எனப் பலவகை உண்டு. ஆடுகளில் மேல் தாடையில் பற்கள் காணப்படுவதில்லை.
எனவே கீழ்த்தாடைக் பற்களின் எண்ணிக்கையை வைத்து வயதைக் கணிக்கலாம். கீழ்க்கண்ட அட்டவணை ஆடுகளின் வயதை பற்களின் எண்ணிக்கையை வைத்து அறிய உதவும் தொழில்.
வயது பற்களின் அமைப்பும், எண்ணிக்கையும்
பிறந்தவுடன் 0-2 ஜோடி பால் பற்கள்
6-10 மாதம் கீழ்த்தாடையின் முன்புறம் 8 முன்பற்கள் இவை அனைத்தும் பால் பற்கள்
ஒன்றரை வயது நடுவில் உள்ள இரண்டு முன் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும்.
இரண்டரை வயது நான்கு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
மூன்றரை வயது ஆறு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
4 வயது எட்டு நிரந்தரப் பற்கள் காணப்படும்.
6-7 வயது பற்கள் விழுந்துவிடும்
ஆடுகளுக்கு அடையாளம் இடுதல்
ஆடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்கும் போது சரியான பராமரிப்பு முறைகளைக் கையாளுவதற்கு அடையாளம் இடுவது அவசியம் ஆகும். இவற்றை 3 முறைகளில் செய்யலாம்.
1. காதுகளில் பச்சைக் குத்தி எழுத்துக்களைப் பொறித்தல்
2. வாலில் பச்சை தொழில் குத்துதல்
3.காதுகளில் உலோகம் அல்லது பிளாஸ்டிக்குளால் ஆன அடையாள அட்டைகளை மாட்டுதல் போன்ற முறைகளைக் கையாளலாம்.
இவை ஒவ்வொரு ஆடு பற்றி விபரப் பதிவேடுகளை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.